Tuesday, October 31, 2006

கலகலத்த கூட்டணி...!

உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டதில் ஒதுக்கப்பட்ட இடங்கள் பலவற்றை அக்கட்சிகள் இழந்துள்ளன. இது குறித்து அக்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதில் ஒருபடி மேலே சென்று பாமக தலைவர் ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி 'திமுக பச்சை துரோகம்' என்று வர்ணித்தார். தாங்கள் இனி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறியிருப்பதன் மூலம் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதனால் இனி இப்போதைய உள்ளாட்சித் தலைவர்கள் பலரின் பதவி தொடருமா என்பது கேள்விக்குறியாகி விட்டது. கூட்டணிக்காக அந்தந்த கட்சிக்கு பெரும்பான்மை இல்லாமல், சில உறுப்பினரே தேர்வான இடங்களில் கூட மாற்றுக் கட்சியினர் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இது எதிரொலிக்கக் கூடும்.

தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணிகள் கலகலக்கத் தொடங்கி விட்டன. மக்களாலேயே உள்ளாட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். அதை மாற்றியதன் விளைவைத் தான் இப்போது பார்க்கிறோம். கட்சி மாறல், வேட்பாளர் கடத்தல், விலைபேசல் பேரங்கள் என தலைவர்கள் தேர்தலில் நடைபெற்ற அலங்கோலங்களும், அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டணி கலகலப்புகளும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன.

அடுத்த தேர்தலுக்குள் இன்னும் பல கட்சிமாறல்களையும் காட்சிமாற்றங்களையும் மக்கள் சந்திக்க நேரிடும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

மக்களாட்சியில் மக்களை பாவைகளாக்கி அரசியல் கட்சிகள் ஆடும் அரசியல்கூத்து!

Sunday, October 29, 2006

திமுக ஏமாற்றியது?

ஒதுக்கப்பட்ட இடங்களில் பா.ம.க.- காங்கிரஸ், கம்யூனிஸ்டு தோல்வி: தி.மு.க. மீது குற்றச்சாட்டு

சென்னை, அக். 29-

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 6 மாநகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. நகராட்சி, பேரூராட்சி, பஞ் சாயத்து ïனியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. திடீரென்று போட் டியிட்டு வெற்றி பெற்றது. இதனால் கம்யூனிஸ்டு, பா.ம.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு ஒதுக்கிய ஆற்காடு நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. சிதம்பரம் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. கூட்டணி இடபங்கீடு பட்டிய லில் பா.ம.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகள் பெயரும் இடம் பெற்று இருந்தது. இருகட்சி சார்பி லும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பவுசியாபேகம் வெற்றி பெற்றார்.

திட்டக்குடி பேரூராட்சி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 3 ஓட்டுகளே பெற்று பா.ம.க. வேட்பாளர் வசந்தா தோல்வி அடைந்தார். தி.மு.க. ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் மன்னன் 13 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நல்லூர் ஒன்றியத்தில் அக்கட்சி சார்பில் யாரும் போட்டியிடாததால் தி.மு.க. வேட்பாளர் ஜெயசித்ரா வெற்றி பெற்றார்.

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாடுதுறை நகரசபையில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் லிங்குராஜ் 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் 13 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

சீர்காழி நகரசபையில் தி.மு.க.வும், பா.ம.க.வும் மோதிக் கொண்டது. இதில் தி.மு.க.வை சேர்ந்த சாந்தினி 18 ஓட்டுகள் பெற்று தலைவர் ஆனார். பா.ம.க.வை சேர்ந்த சுபா 6 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

செம்பனார் கோவில் ïனியன் தலைவர் தேர்தலில் தி.மு.க., பா.ம.க. இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ம.க. தோல்வி அடைந் தது.

ஈரோடு காசிபாளையம் 3-ம் நிலை நகராட்சி தலை வர் பதவி தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட் சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தி.மு.க. சார்பில் சுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஈரோடு பெரிய அக்ரகாரம் பேரூராட்சியில் தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இவரது வேட்பு மனுவை வழிமொழிய யாரும் முன் வராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜாபர் சாதிக் 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவி உழவர் உழைப்பாளர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க. முயற்சி செய்ததால் உழவர் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த செல்லமுத்து வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை. தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ் தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தலைராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. தலைவர் பதவி வேட்பாளராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ம.க. பிரமுகர் காமராஜ் அறிவிக்கப்பட்டார்.

அவர் மனுதாக்கல் செய்ய வரும்போது தி.மு.க. வேட்பாளராக ஆதிமகேந் திரன் மனுதாக்கல் செய்த விவரம் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் `திடீரென்று' மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.

தலைவர் பதவிக்கு நிறுத் தப்பட்ட தி.மு.க. வேட்பாளர் ஆதிமகேந்திரன் வெற்றி பெற்றார். இதை கண்டித்து பா.ம.க.வினர் மேகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஓசூர் நகராட்சி தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. பா.ம.க.வைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் எஸ்.ஏ.சத்யா போட்டியிட்டார். இதில் எஸ்.ஏ.சத்யா வெற்றி பெற்றார்.

இந்த நகராட்சியில் மொத் தம் 30 கவுன்சிலர்கள் உள்ள னர். இதில் தி.மு.க.வுக்கு 10 கவுன்சிலர்களும், காங்கிர சுக்கு 4 கவுன்சிலர்களும், பா.ம.க.வுக்கு 2 கவுன்சிலர் களும் உள்ளனர். அ.தி.மு.க. வுக்கு 7 பேரும், விஜயகாந்த் கட்சிக்கு ஒரு கவுன்சிலரும், 6 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.

தி.மு.க. கூட்டணிக்கு 16 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்ததால் பா.ம.க. வேட் பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணியில் இருந்து 6 பேர் கட்சி மாறி ஓட்டு போட்டு உள்ளனர். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களில் 6 பேர் கட்சி மாறி ஓட்டு போட்டதால் எஸ்.ஏ.சத்யா 16 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெண்ணந் தூர், மல்லசமுத்திரம், மோக னூர் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களும், ஆலாம்பாளை யம், வெண்ணந்தூர், சேந்த மங்கலம், அத்தனூர் ஆகிய 4 பேரூராட்சிகளும் ஒதுக்கப் பட்டு இருந்தன.

இதில் மல்லசமுத்திரம், மோகனூரில் தி.மு.க. வேட் பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 4 பேரூராட்சி தலைவர் இடங்களில் தி.மு.க-2, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.

குழித்துறை நகரசபை கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட் டது. ஆனால் தி.மு.க. வேட்பா ளர் ஆசைதம்பி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நாகர்கோவில் நகரசபை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக மேரிஜோஸ்பின் அம்மாள் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரை எதிர்த்து காங்கிரஸ்ë போட்டி வேட்பாளராக அசோக்சாலமன் போட்டி யிட்டு வெற்றிபெற்றார்.

ரீத்தாபுரம் பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு பா.ஜனதா, கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

கணபதிபுரம் பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கும் தே.மு.தி.க. பா.ஜனதா உதவியுடன் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. திங்கள்சந்தை பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தி.மு.க. ஆதரவுடன் பா.ஜனதா வெற்றி பெற்றது.

பாகோடு பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைவர் பதவியை பிடித்துள்ளனர்.

கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட கடையாலு பேரூராட்சியில் காங்கிரசும் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப் பட்ட திற்பரப்பு பேரூராட் சியை பா.ஜனதாவும் கைப்பற்றியது. ஏழுதேசம் பேரூராட்சி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பா.ஜனதா உதவியுடன் காங்கிரஸ் பேரூராட்சியை பிடித்துள்ளது.

குருந்தன்கோடு யூனியன் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கவுன்சிலர், அ.தி. மு.க.வுக்கு ஆதரவு அளித் துள்ளதை அடுத்து அ.தி.மு.க. போட்டியின்றி தேர்ந்தெ டுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சுயேட்சைகள் ஆதரவுடன் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தி.மு.க.- காங்கிரஸ் கட்சி இடையே தகராறு ஏற்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் சேத்தூர் பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. இங்கு அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பதவியை தன் வசப்படுத்தி உள்ளது. துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு ஆதரவுடன் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

ராஜபாளையம் நகரசபை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு காங்கிரஸ் வேட்பாளர் ரத்தினம்மாள் நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மானாமதுரை பேரூராட்சி தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. மொத்தம் உள்ள 18 வார்டு களில் ஒரு இடத்தில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை. இதனால் தி.மு.க. சார்பில் ராஜாமணி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் அவனியா புரம் நகரசபை பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்தையா வெற்றி பெற்றார். தி.மு.க.வினர் ஆதரவு இல்லாத தால் பா.ம.க. சார்பில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்ட இளஞ்செழியன் மனுதாக்கல் செய்ய வில்லை.

மேலூர் ஊராட்சி ஒன்றி யம் காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. இங்கு காங் கிரசை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அழகு பாண்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. கூட்டணியில் கட்சி மாறி ஓட்டுப் போட்டதால் பா.ம.க.வுக்கு நகரசபை மற்றும் பேரூராட்சி, யூனியன் தலைவர் பதவிகளில் 40 இடங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சி மாறி ஓட்டுப் போட்ட தால் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து ஓசூர் நகரசபை ஆகியவற்றை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த கட்சி சார்பில் கவுன்சிலர் சிவகாமி சுந்தரி தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டார்.

நேற்று காலை 9.30 மணிக்கு சிவகாமி சுந்தரி வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் முன்மொழி யவும், வழி மொழியவும் கேட்டார். அதற்கு அவர்கள் யாருமே முன்வரவில்லை. மாறாக தி.மு.க.வை சேர்ந்த எம்.ஜி.பெல்லும், காங்கிரசை சேர்ந்த மோகன்குமார ராஜாவும் தனித்தனியே தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர்.

இதை பார்த்த இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சிவகாமி சுந்தரி தேர்தலை புறக்கணித்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த எம்.ஜி.பெல் 16 ஒட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

நாங்குநேரி பேரூராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த சங்கரன் வெற்றி பெற்றார். பண்மொழி பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது.

மானூர் ஒன்றிய சேர்மன் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டது இதில் காங்கிரஸ் எந்த வார்டிலும் வெற்றி பெறாததால் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது. சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பா.ம.க. வேட்பாளருக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு என்று ஒதுக்கப் பட்ட ஒரு பேரூராட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் ராதாபுரம் ஒன்றியமும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது.

தி.மு.க.-காங்கிரசால் பா.ம.க. தோற்கடிக்கப்பட்ட தற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திருவண்ணாமலை, வேலூர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி.ராமசாமி ஆகிய 3 பேரிடம் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் விளக்கம் கேட்டு இருக்கிறார்.

செய்தி: மாலைமலர்

மாநகராட்சி மேயர்

சென்னையில் திமுகவைச் சேர்ந்த மா. சுப்பிரமணியம் மேயராகவும் ஆர்.சத்தியபாமா துணைமேயராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைமேயர்கள்

முன்னதாக நேற்று நடைபெற்ற மாநகராட்சி துணைமேயர் தேர்தல் விவரம்.

திருச்சியில் மு.அன்பழகன், மதுரையில் பி.எம்.மன்னன்,
கோவையில் நா.கார்த்திக் ஆகிய திமுக கவுன்சிலர்கள் துணை மேயர்களாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

சேலத்தில் துணை மேயர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் சி.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அ.தி.மு.க.வை சேர்ந்த வி.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். 43 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று சி.பன்னீர்செல்வம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு 17 ஓட்டுகள் கிடைத்தன.

நெல்லை துணை மேயர் பதவிக்கு தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளரான முத்துராமலிங்கத்தை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த பி.சுப்பிரமணியன் போட்டியிட்டார். முத்துராமலிங்கத்துக்கு 26 ஓட்டுகளும், சுப்பிரமணியனுக்கு 25 ஓட்டுகளும் கிடைத்தன. 2 ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளர் முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார்.

நகராட்சிகள்

மொத்தம் உள்ள 152 நகராட்சிகளில் தி.மு.க. கூட்டணி 129 நகராட்சி தலைவர்கள் பதவியை கைப்பற்றி உள்ளது. (தி.மு.க-97, காங்-19, பா.ம.க-7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-4, இந்திய கம்யூனிஸ்டு-1, விடுதலை சிறுத்தைகள்-1).

அ.தி.மு.க.வுக்கு 17 இடங்கள் கிடைத்து உள்ளன. சுயேச்சைகளுக்கு 7 இடங்கள் கிடைத்து உள்ளன. 2 இடங்களில் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Saturday, October 28, 2006

போட்டியின்றி தேர்வு

மதுரை, சேலம், நெல்லை, ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களாக முறையே திமுகவைச் சேர்ந்த தேன்மொழி கோபிநாத், ரேகா பிரியதர்ஷினி, ஏ.எல்.சுப்ரமணியம், கோவையில் காங்கிரஸ் சார்பில் காலனி வெங்கடாச்சாலம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அதிமுக சார்பில் மரியம்பிச்சை என்ற கவுன்சிலர் போட்டியிட்டார். மொத்தம் 60 வாக்குகளில் 42 வாக்குகள் பெற்று சாருபாலா தொண்டைமான் மேயராக தேர்வு பெற்றார்.

மொத்தம் உள்ள 152 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலானவற்றை திமுக கூட்டணியினரே கைப்பற்றினர்.

திண்டுக்கல், ஆத்தூர், ஈரோடு, கரூர், சத்தியமங்கலம், அறந்தாங்கி, மேலூர், திருத்துறைப்பூண்டி, பத்மநாபபுரம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

சிவகாசி, திருமங்கலம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. திண்டிவனம், தாராபுரம் ஆகிய தலைவர் பதவி தேர்தலில் பாமக வெற்றி பெற்றது.

ஓசூர், நாமக்கல், குடியாத்தம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக வென்றது. குழித்துறை, குளச்சல் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை எந்தக் கட்சியையும் சேராத சுயேச்சைகள் வென்றனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பவானி, புளியங்குடி, பரமக்குடி, பூந்தமல்லி நகராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

குளித்தலை நகராட்சித் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை எதிர்த்து திமுக கவுன்சிலர் போட்டியிட்டு தலைவர் பதவியைக் கைப்பற்றி விட்டார். குழித்துறை நகராட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு காங்கிரஸ் பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.

மொத்தம் உள்ள 152 நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக கூட்டணி 127 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் திமுக 95 தலைவர் பதவிகளையும், காங்கிரஸ் 20 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், விடுதலைச் சிறுத்தைகள் நெல்லிக்குப்பம் நகராட்சியிலும் வெற்றி பெற்றனர்.

அதிமுகவுக்கு 16 நகராட்சித் தலைவர் பதவிகள் கிடைத்துள்ளன. கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு ஒரு நகராட்சியும் கிடைக்கவில்லை. சுயேச்சைகள் 7 நகராட்சித் தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.

மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவிகளில் திமுக-15, காங்கிரஸ்-5, பாமக-4, இந்திய கம்யூ-1, மார்க் கம்யூ-1, அதிமுக-1 வெற்றி பெற்றுள்ளனர்.

Friday, October 27, 2006

காங்கிரஸ் மேயர்கள்

சென்னை தவிர 5 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தல் நாளை (அக்டோபர் 28) நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் மேயர், துணைமேயர் தேர்தல் நாளை மறுநாள் அக்டோபர் 29 சனிக்கிழமை நடைபெறுகிறது.

மேயர்கள், துணை மேயர்களை அந்தந்த மாநகராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் நாளை தேர்ந்து எடுக்கிறார்கள். காலை 9.30 மணிக்கு மேயர் தேர்தலும், 11 மணிக்கு துணை மேயர் தேர்தலும் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை காலை நடைபெறுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தால் மறைமுக தேர்தல் மூலம் மேயர், துணை மேயர்களை கவுன்சிலர்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். ஒருவர் மட்டுமே ஒரு பதவிக்கு மனு செய்திருந்தால் மேயர் அல்லது துணை மேயராக அவரே ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் படுவார். தேர்தலில் வெற்றி பெறும் மேயர், துணை மேயர்கள் நாளை பதவி ஏற்கிறார்கள்.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் காலனி வெங்கடாசலம், திருச்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டமான் ஆகியோர் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

பிற மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் விவரம்:

Wednesday, October 25, 2006

மேயர் வேட்பாளர்கள்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தலில் வென்ற உறுப்பினர்கள்,ஊராட்சித் தலைவர்கள் இன்று பதவி ஏற்றனர்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் வென்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 155 கவுன்சிலர்களில் 153 பேர் மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 4 உறுப்பினர்களில் சுந்தரமூர்த்தி (61-வது வார்டு), எம்.கிருஷ்ணன் (71-வது வார்டு) ஆகியோர் ஜெயலலிதா உத்தரவுக்கேற்ப பதவியை ராஜினாமா செய்து விட்டதால் அவர்கள் இருவரும் மட்டும் இன்று பதவி ஏற்கவில்லை. 1-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி, 26-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். ராஜினாமா செய்ய மறுத்ததால் இவர்கள் இருவரையும் ஜெயலலிதா நேற்று கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.

40-வது வார்டில் வெற்றி பெற்ற ஒரே ஒரு ம.தி.மு.க. கவுன்சிலர் கன்னியப்பன் வைகோ உத்தரவுப்படி ராஜினாமா செய்ய மறுத்து இன்று பதவியேற்றார். இதனால் இவரை இன்று வைகோ மதிமுகவை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் மாநகராட்சி மேயர், துணைமேயர் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

சென்னை

மேயர்-மா.சுப்பிரமணியம்

துணை மேயர்-ஆர்.சத்தியபாமா

மதுரை

மேயர்-தேன்மொழி கோபிநாதன்

துணை மேயர்

பி.எம்.மன்னன்

நெல்லை

மேயர்-ஏ.எல். சுப்பிரமணியம்

துணை மேயர்-கா.முத்துராமலிங்கம்

சேலம்

மேயர்-ரேகா பிரியதர்ஷினி

துணை மேயர்-பி.பன்னீர் செல்வம்

கோவை

துணை மேயர்-ந.கார்த்திக்

திருச்சி

துணை மேயர்-மு.அன்பழகன்

கோவை, திருச்சிக்கு திமுக மேயர் வேட்பாளர்களை அறிவிக்காததால் இங்கு காங்கிரஸ் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

மேயர், துணைமேயர் தேர்தல் அக்டோபர் 28 சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினமே நகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி தலைமைப் பொறுப்புகளுக்கான தேர்தலும் நடைபெறும்.

Tuesday, October 24, 2006

நாளை பதவியேற்பு

சென்னை மாநகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் நாளை பதவி ஏற்பு: 29-ந்தேதி மேயர் தேர்தல்

சென்னை, அக்.24-

சென்னை மாநகராட் சிக்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 155 வார்டுகளில் 149-ல் வெற்றி பெற்றது.தி.மு.க. தனித்து பொறுப்பேற்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் பெற் றுள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார்கள். இதற்கான விழா மாநகராட்சி 2-வது மாடியில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெறுகிறது.

புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் எம்.பி. விஜயகுமார் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
நாளை மேயர், துணை மேயர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 28-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் 29-ந்தேதி தேர்வு செய்யப்படுவார். இவர் களுக்கு மாநகராட்சி கமிஷனர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

கவுன்சிலர்களாக பதவி ஏற்பவர்கள் மட்டுமே மேயர், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும். எனவே சென்னை மாநகராட்சி வார்டு களில் தேர்வானவர்கள் நாளை தவறாமல் பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

சென்னை மாநகராட்சி மேயர் 29-ந்தேதி தேர்வானதும் அவரிடம் மேயருக்கான கவுன், ரோப் மற்றும் ஆபரணங்கள் ஒப்படைக்கப்படும். இதை யடுத்து அவர் தன் அறைக்கு சென்று பணிகளை தொடங்கு வார்.

அதன் பிறகு சென்னை மாநகராட்சி முதல் கூட்டத்துக் கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும். அது போல இதர உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவி ஏற்பவர்கள் முறைப்படி முதல் கூட்டத்துக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்புகளை வெளி யிடுவார்கள்.

தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று இருப்பதால் தி.மு.க. கவுன்சிலர்களில் ஒருவர் மேயராக நிறுத்தப்படுகிறார். மா.சுப்பிரமணியன், தன சேகரன், சுரேஷ்குமார் ஆகி யோரில் ஒருவர் மேயர் பதவிக்கு அறிவிக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டி பஇருக்க வாய்ப்பு இல்லை.எனவே அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்.

சென்னை மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்டு இதுவரை 45 மேயர்கள் பதவியில் இருந் துள்ளனர். 29-ந் தேதி பதவி ஏற்பவர் 46-வது மேயர் ஆவார்.

நாளை நடக்கும் உறுப்பினர் பதவி ஏற்பு விழா மற்றும் 29-ந் தேதி நடக்கும் மேயர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களுக்கு விசேஷ அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

செய்தி: மாலைமலர்.

அதிமுக கவுன்சிலர்கள் ராஜினாமா

சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெறும் நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்தன.

புவனேஸ்வரி (வார்டு 1),
சுபாஷ் சந்திரபோஸ் (வார்டு 26),
சுந்தரமூர்த்தி(வார்டு 61),
எம்.கிருஷ்ணன் (வார்டு 71)

ஆகியோர் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்று மாநகராட்சி கவுன்சிலராக தேர்வாகியுள்ளனர். இதனால் இவர்கள் நால்வரையும் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்யும்படி அதிமுக தலைமை கட்டளையிட்டது. லட்சக்கணக்கில் செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்ற பின் ராஜினாமா செய்ய அவர்கள் தயக்கம் காட்டினர். எனவே தேர்தலில் செலவழித்த பணத்தை கட்சியின் சார்பில் ஈடுகட்டி விடுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின் சுந்தரமூர்த்தி, கிருஷ்ணன் ஆகிய இருவரும் ராஜினாமா கடித்த்தை அளித்ததாக தெரிகிறது. புவனேஸ்வரி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்ய மறுத்து விட்டதால் அவர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப் பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் திமுகவில் சேரக்கூடும் எனத் தெரிகிறது. இதனால் சென்னை மாநகராட்சியில் அதிமுக உறுப்பினர்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது.

Saturday, October 21, 2006

திமுகவுக்கே 6 மேயர் பதவிகள்?

சென்னை மாநகராட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி

சென்னை மாநகராட்சி தேர்தலில் இன்று காலை வரை அறிவிக்கப்பட்ட 153 முடிவுகளில் 148 வார்டுகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 4; விடுதலை சிறுத்தைகள்:2; பகுஜன் சமாஜ்: 1; சுயேச்சை: 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

பிற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முழுவிவரம்.

சென்னை தவிர்த்த 5 மாநகராட்சி

தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 318
தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வார்டு: 1

கட்சி வென்ற வார்டுகள்

திமுக 148
காங்கிரஸ் 27
கம்யூனிஸ்ட் 9
மார்க்சிஸ்ட் 18
பாமக 5
விடுதலை சிறுத்தைகள் 1
அதிமுக 58
மதிமுக 8
பாஜக 2
தேமுதிக 16
சுயேச்சைகள் 26
----------

நகராட்சிகள்

தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 4,374
தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வார்டு: 5

கட்சி வென்ற இடம்

திமுக 1595
காங்கிரஸ் 407
கம்யூனிஸ்ட் 40
மார்க்சிஸ்ட் 75
பாமக 125
விடுதலை சிறுத்தைகள் 3
அதிமுக 1016
மதிமுக 140
பாஜக 44
தேமுதிக 98
புதியதமிழகம் 1
பகுஜன் சமாஜ் கட்சி 1
மற்றகட்சிகள் 4
சுயேச்சைகள் 825
------------

பேரூராட்சிகள்

தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 8,780
தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வார்டுகள்: 2
வேட்புமனு பெறாத வார்டுகள்:25

கட்சி வென்ற இடம்

திமுக 2639
காங்கிரஸ் 737
கம்யூனிஸ்ட் 52
மார்க்சிஸ்ட் 164
பாமக 184
விடுதலை சிறுத்தைகள் 8
அதிமுக 1643
மதிமுக 184
பாஜக 148
தேமுதிக 234
புதியதமிழகம் 4
பகுஜன்சமாஜ் 2
ஐக்கியஜனதாதளம் 1
புதிய நீதிகட்சி 1
மற்றகட்சிகள் 3
சுயேச்சைகள் 2776
--------------

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்

தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 6569
தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வார்டு: 1

கட்சி வென்ற இடம்

திமுக 2488
காங்கிரஸ் 609
மார்க்சிஸ்ட் 85
கம்யூனிஸ்ட் 81
பாமக 423
விடுதலை சிறுத்தைகள் 8
அதிமுக 1417
மதிமுக 181
பாஜக 31
தேமுதிக 244
புதியதமிழகம் 5
இந்திய விக்டரி கட்சி 1
மற்றகட்சிகள் 6
சுயேச்சைகள் 990
-----------

மாவட்ட ஊராட்சி வார்டு

தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 656
கட்சி வென்ற இடம்

திமுக 312
காங்கிரஸ் 80
கம்யூனிஸ்ட் 14
மார்க்சிஸ்ட் 7
பாமக 48
விடுதலை சிறுத்தைகள் 3
அதிமுக 157
மதிமுக 14
பாஜக 3
தேமுதிக 15
சுயேச்சைகள் 3

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நகராட்சி பேரூராட்சிகள் தலைவர் பதவிகளில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன.

கடைசி நிலவரப்படி 6 மாநகராட்சி மேயர் பதவிகளையுமே தி.மு.க., தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது. திருச்சி, கோவையை பெற காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ஆவடி, அரக்கோணம், நாகர்கோவில் , தர்மபுரி, மன்னார்குடி, தாம்பரம், தேவக்கோட்டை, திருமங்கலம், விருதுநகர், தேனி, எடப்பாடி, கோபிசெட்டிப்பாளையம், சின்னமனூர், உள்ளிட்ட நகராட்சி தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன .

பாமகவுக்கு ஆத்தூர், வந்தவாசி, விருத்தாச்சலம், மாதவரம், சீர்காழி ஆற்காடு ஆகிய நகராட்சி தலைவர் பதவிகளும், காஞ்சிபுரம், சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குழித்துறை, கோவில்பட்டி, பழனி, சிதம்பரம், திருவெற்றியூர் ஆகிய நகராட்சி தலைவர் பதவியும், நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூ கட்சிக்கு திருவாரூர், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி இடமும், கடையநல்லூர், ராஜபாளையம் நகராட்சி தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம், திண்டிவனம் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தரப்பட்டுள்ளது,

மேலும் புரட்சி பாரதம், உழவர் உழைப்பாளர் கட்சிக்கு தலா ஒரு பேரூராட்சி தலைவர் பதவி இடம் வழங்கப்பட்டுள்ளது.

Thursday, October 19, 2006

தேர்தல் முடிவுகள் செய்தி

உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டு மொத்தமாக அள்ளியது தி.மு.க., * கூட்டணி பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுருண்டது அ.தி.மு.க., * கணிசமாக கணக்கை துவக்கியது தே.மு.தி.க.,

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., கூட்டணி பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அ.தி.மு.க., சுருண்டுள்ளது. தே.மு.தி.க.,வும் பல இடங்களில் கணக்கை தொடங்கியுள்ளது. பெரும்பாலான நகராட்சிகளில் சுயேச்சைகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இதில் 18 ஆயிரம் பதவிகளுக்கு போட்டியின்றி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சியுள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 487 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 700 மையங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதால் மற்ற ஐந்து மாநகராட்சி பகுதிகளிலும் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. இந்த ஐந்து மாநகராட்சிகளையும் தி.மு.க., கூட்டணியே கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி பலத்தால் பேரூராட்சி, நகராட்சி, 3ம் நிலை நகராட்சி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் தி.மு.க., கூட்டணி ஒட்டுமொத்தமாக அள்ளியுள்ளது. கூட்டணி பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30 சதவீதத்திற்கும் குறைவான இடங்களையே அ.தி.மு.க., கைப்பற்ற முடிந்துள்ளது.

முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் தே.மு.தி.க., பெரும்பாலான இடங்களில் கணக்கைத் துவங்கி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மதுரை உள்ளிட்ட ஒருசில இடங்களில் அ.தி.மு.க.,வைவிட கூடுதல் இடங்களைப் பிடித்து பிரதான எதிர்க்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., கூட்டணி கட்சிகளும் தாங்கள் போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலும் வெற்றிபெற்று கூட்டணி சார்பில் தலைவர் பதவிகளை கைப்பற்ற வழிவகுத்துள்ளன.

மாநகராட்சிகளின் தேர்தல் முடிவுகள்: * நெல்லை மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 55 ; முடிவு தெரிந்தவை: 55 ; தி.மு.க., கூட்டணி: 34 ; அ.தி.மு.க., கூட்டணி: 13 ; பா.ஜ. க. 1 ; சுயேச்சைகள்: 7 * மதுரை மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 72; முடிவு தெரிந்தவை: 65 ; தி.மு.க., கூட்டணி: 43 ; அ.தி.மு.க., கூட்டணி: 9 ; தே.மு.தி.க.,: 9 ; சுயேச்சைகள்: 4 * திருச்சி மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 60; முடிவு தெரிந்தவை: 56 ; தி.மு.க., கூட்டணி: 36; அ.தி.மு.க., கூட்டணி: 13; தே.மு.தி.க.,: 1; சுயேச்சைகள்: 6 ; 4 வார்டுகளில் தி.மு.க.முன்னணி வகிக்கிறது * கோவை மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 72; முடிவு தெரிந்தவை: 44 ; தி.மு.க., கூட்டணி: 30 ; அ.தி.மு.க., கூட்டணி: 5 ; தே.மு.தி.க 2 ; பா.ஜ.க. 1 ; சுயேச்சைகள்: 6 * சேலம் மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 60; முடிவு தெரிந்தவை: 31; தி.மு.க., கூட்டணி: 20 ; அ.தி.மு.க 8 ; தே.மு.தி.க.,: 2 ; சுயேச்சைகள்: 1 ; 29 வார்டுகளில் தி.மு.க.முன்னணி.

இதுதவிர பேரூராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தி.மு.க., கூட்டணியே பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகின்றன. வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் அனைத்து உள்ளாட்சி உறுப்பினர் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியில் தெரியவரும் என்று மாநில தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தி.மு.க., கூட்டணிக்கு 1065நகராட்சி கவுன்சிலர் பதவிகள்: நகராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க., கூட்டணி பெற்றுள்ளது. மொத்த நகராட்சிகள் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி கவுன்சிலர் பதவிகள்: 4379; முடிவு அறிவிக்கப்பட்டவை: 2133; திமுக கூட்டணி: 1065; அ.தி.மு.க., கூட்டணி: 551; தே.மு.தி.க.,: 60; சுயே., : 430; பா.ஜ.,: 18; இதர கட்சிகள்: 9 தி.மு.க., கூட்டணிக்கு 1916 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள்: மொத்த பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள்: 8807; முடிவு அறிவிக்கப்பட்டவை: 4470; தி.மு.க., கூட்டணி: 1916; அ.தி.மு.க., கூட்டணி: 926; தே.மு.தி.க.,: 94; பா.ஜ.,: 49; சுயே.,: 1463; இதர கட்சிகள்: 22

செய்தி: தினமலர்

Wednesday, October 18, 2006

திமுக கூட்டணி வெற்றி

ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னை நீங்கலாக, மற்ற 5 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளதால் இந்த 5 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது. மதுரை, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி தக்க வைக்கிறது. கோவை மற்றும் நெல்லை மாநகராட்சிகளை அதிமுகவிடமிருந்து திமுக கூட்டணி பறிக்கிறது. சேலம் மாநகராட்சியில் திமுகவுக்கு தேமுதிக கடும் போட்டியைக் கொடுத்தாலும் திமுக கூட்டணியே வெல்லும் நிலையில் உள்ளது.

அதே போல 102 நகராட்சிகளில் கிட்டத்தட்ட 80 நகராட்சிகளில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளது. 10 நகராட்சிகளில் மட்டுமே அதிமுகவுக்கு முன்னிலை கிடைத்துள்ளது. சில நகராட்சிகளில் தேமுதிக முன்னணியில் உள்ளது. மேலும் 10 இடங்களில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது. 600 மூன்றாம் நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணியினரே பெருவாரியாக முன்னிலையில் உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவும் பல இடங்களை வென்று செல்வாக்கை நிருபித்துள்ளது. ஏராளமான சுயேச்சைகளும் இத்தேர்தலில் வென்றுள்ளனர். முழுமையான விவரங்கள் மற்றும் கிராம ஊராட்சி முடிவுகள் நாளைதான் முழுமையாக வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும் தேர்தல் முடிவுகள்

இதுவரை வெளியான முடிவுகள்:

மதுரை மாநகராட்சி: திமுக 14, அதிமுக 3, தேமுதிக 2ல் வெற்றி.
கோவை மாநகராட்சி: திமுக 16, அதிமுக 2ல் வெற்றி.
திருச்சி மாநகராட்சி: திமுக 12, அதிமுக 3, தேமுதிக 1ல் வெற்றி.
சேலம் மாநகராட்சி: திமுக 9, அதிமுக 4, தேமுதிக 2ல் வெற்றி.
நெல்லை மாநகராட்சி: திமுக 23, அதிமுக 6, மற்றவை 4ல் வெற்றி.
தென்காசி: திமுக 8, அதிமுக 3ல் வெற்றி.
காஞ்சிபுரம்: திமுக 14, அதிமுக 10ல் வெற்றி.
கொடைக்கானல்: திமுக 4ல் வெற்றி.
குளச்சல்: சுயேச்சை 18 வார்டுகளில் வெற்றி.
குளித்தலை: திமுக 4, அதிமுக 4ல் வெற்றி.
ராசிபுரம்: திமுக 2 அதிமுக 2ல் வெற்றி.
சங்கரன்கோவில்: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
சாத்தூர்: திமுக 5, மற்றவை 1ல் வெற்றி.
செங்கோட்டை: திமுக 12, அதிமுக 6 தேமுதிக 1ல் வெற்றி.
சீர்காழி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
சிவகங்கை: திமுக 3, அதிமுக 2, தேமுதிக 1ல் வெற்றி.
தாம்பரம்: திமுக 17, அதிமுக 7ல் வெற்றி.
தஞ்சை: திமுக 11, அதிமுக 2ல் வெற்றி.
தாராபுரம்: திமுக 4ல் வெற்றி.
சிவகங்கை: திமுக 7, அதிமுக 4, தேமுதிக 2ல் வெற்றி.
திருவண்ணாமலை: திமுக 8, அதிமுக 4ல் வெற்றி.
திருவொற்றியூர்: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
திருவள்ளூர்: அதிமுக 4, திமுக 3ல் வெற்றி.
துறையூர்: திமுக 6, அதிமுக 1ல் வெற்றி.
தூத்துக்குடி: திமுக 9, அதிமுக 2ல் வெற்றி.
உசிலம்பட்டி: திமுக 7, அதிமுக 4ல் வெற்றி.
வேலூர்: திமுக 8, அதிமுக 2ல் வெற்றி.
விழுப்புரம்: திமுக 5, அதிமுக 1ல் வெற்றி.
விருத்தாச்சலம்: திமுக 8, அதிமுக 7ல் வெற்றி.
விருதுகர்: திமுக 8, அதிமுக 5ல் வெற்றி.
ஆத்தூர்: திமுக 6, அதிமுக 2ல் வெற்றி.
ஆவடி: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.
ஆலந்தூர்: திமுக 18, அதிமுக 1, தேமுதிக 1ல் வெற்றி.
அம்பத்தூர்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
ஆரணி: திமுக 3, அதிமுக 3, தேமுதிக 3ல் வெற்றி.
அரக்கோணம்: திமுக 15, அதிமுக 2ல் வெற்றி.
கோவில்பட்டி: திமுக 5, அதிமுக 3ல் வெற்றி.
குமாரபாளையம்: அதிமுக 6, திமுக 5ல் வெற்றி.
மாதவரம்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
மதுராந்தகம்: திமுக 6, அதிமுக 4ல் வெற்றி.
மேலூர்: திமுக 4, அதிமுக 3ல் வெற்றி.
மணப்பாறை: அதிமுக 2, திமுக 1ல் வெற்றி.
மன்னார்குடி: அதிமுக 7, திமுக 3ல் வெற்றி.
நெல்லிக்குப்பம்: திமுக 4, அதிமுக 2, தேமுதிக 2ல் வெற்றி.
ஊட்டி: திமுக 6ல் வெற்றி.
பல்லாவரம்: திமுக 23, அதிமுக 4ல் வெற்றி.
பள்ளிப்பாளையம்: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.
சீர்காழி: அதிமுக 1, திமுக 1 வெற்றி.
நாகை: அதிமுக 7, திமுக 2 வெற்றி.
வேதாரண்யம்: அதிமுக 2, திமுக 2 வெற்றி.
செங்கல்பட்டு: திமுக 2, அதிமுக , தேமுதிக 2ல் வெற்றி.
எண்ணூர்: அதிமுக 2, திமுக 2 தேமுதிக 1ல் வெற்றி.
மணலி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
திருத்தணி: திமுக 3, அதிமுக1ல் வெற்றி.
செங்கோட்டை: திமுக 10, அதிமுக 3, தேமுதிக 1ல் வெற்றி.
சிவகாசி: திமுக 5, அதிமுக 1ல் வெற்றி.
ஆவடி: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.
சின்னமனூர்: திமுக 2, மற்றவை 2ல் வெற்றி.
சிதம்பரம்: திமுக 1ல் வெற்றி.
கடலூர்: திமுக 7, அதிமுக 1ல் வெற்றி.
திண்டிவனம்: திமுக 1ல் வெற்றி.
எடப்பாடி: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
தாராபுரம்: திமுக 4 வார்டுகளில் வெற்றி.
திருமங்கலம்: அதிமுக 4, திமுக, 2, தேமுதிக 2ல் வெற்றி.
திருவாரூர்: திமுக 12, அதிமுக 2ல் வெற்றி.
சேலம்: திமுக, பாமக, தேமுதிக தலா 2 வார்டுகளில் வெற்றி.
திருவாரூர் நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது.
கோபி: திமுக 4, அதிமுக 1ல் வெற்றி.
குளச்சல்: சுயே. 10, திமுக 1ல் வெற்றி.
கத்திவாக்கம்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
மேலூர்: திமுக 4, அதிமுக 3ல் வெற்றி.
மயிலாடுதுறை: திமுக, அதிமுக தலா 1ல் வெற்றி.
பொள்ளாச்சி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
ராஜபாளையம்: திமுக 10, அதிமுக 3, தேமுதிக 2ல் வெற்றி.
சங்கரன்கோவில்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
செய்யாறு: திமுக 3ல் வெற்றி.
சிவகங்கை: அதிமுக 1ல் வெற்றி.
திருத்துறைப்பூண்டி: திமுக 12ல் வெற்றி
திருவண்ணாமலை : அதிமுக 4, திமுக 3ல் வெற்றி.
உசிலம்பட்டி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
நெல்லை: திமுக 7, அதிமுக 3ல் வெற்றி.
சேலம்: தேமுதிக 1 வெற்றி
அம்பத்தூர்: அதிமுக 1 வார்டில் வெற்றி.
அருப்புக்கோட்டை: திமுக 4, அதிமுக 2ல் வெற்றி.
பவானி: திமுக 6ல் வெற்றி.
போடி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
திண்டுக்கல்: திமுக 12, அதிமுக 7ல் வெற்றி.
எடப்பாடி: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
ஓசூர்: திமுக 6, அதிமுக 1ல் வெற்றி.
காரைக்குடி: திமுக 5 வார்டுகளில் வெற்றி.
மன்னார்குடி: அதிமுக 5, திமுக 3ல் வெற்றி.
ஊட்டி: திமுக 4, மற்றவை 8ல் வெற்றி.
பரமக்குடி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
பழனி: திமுக 4, அதிமுக 4ல் வெற்றி.
மதுரை: திமுக 7 தேமுதிக 1 வெற்றி
ஆத்தூர்: திமுக 5, பாமக 1, அதிமுக 2 வெற்றி.
விருத்தாச்சலம்: திமுக 3, அதிமுக 1 வெற்றி.
சீர்காழி: திமுக 2, அதிமுக 1 வெற்றி.
மேட்டூர்: திமுக 3 , சுயே 1 வெற்றி
சேலம்: அதிமுக 4, திமுக 1 வெற்றி.
திருச்சி மாநகராட்சி: திமுக 4, மதிமுக 1, அதிமுக 1, கம்யூனிஸ்ட் 1
நெல்லை: முதல் வார்டுகளில் அதிமுக வெற்றி
குற்றாலம் பேரூராட்சி: திமுக வெற்றி
கிருஷ்ணகிரி: திமுக 3, தேமுதிக 1, சுயேட்சை 2, காங் 1, அதிமுக 1
கோவை மாநகராட்சி : திமுக 2, மார்க்சிஸ்ட் 1, காங்.1, அதிமுக 1, சுயேட்சை 1
பெரியகுளம்: திமுக 3 வெற்றி அதிமுக 2 வெற்றி
தேனி: அதிமுக 3 வெற்றி, திமுக 1 வெற்றி
திருவள்ளூர்: அதிமுக 4 வெற்றி, திமுக 3 வெற்றி
தூத்துக்குடி: திமுக 4 வெற்றி
காரைக்குடி: திமுக 6 வார்டுகளில் வெற்றி
கூத்தாநல்லூர்: திமுக 10, அதிமுக 2
கரூர்: திமுக 6, அதிமுக 3
திருத்துறைப்பூண்டி: திமுக 6, காங். 1 ஈரோடு: 83 பேரூராட்சி வார்டுகளில் 25ல் திமுக வெற்றி, சுயே. 32
நாமக்கல்: திமுக, அதிமுக தலா 6 வார்டுகளில் வெற்றி
விழுப்புரம்: திமுக 20, அதிமுக 15
பல்லாவரம்: திமுக 26 வார்டுகளில் முன்னணி
மேல் விஷாரம்: திமுக 9, அதிமுக 5, காங். 2, சுயேச்சை 1
கன்னியாகுமரி: 6 சுயேச்சைகள் வெற்றி
அரக்கோணம்: திமுக 7, அதிமுக 1
குடியாத்தம்: திமுக 3, அதிமுக 1, சுயேச்சை 1
திருப்பத்தூர்: திமுக 1
ராணிப்பேட்டை: திமுக1, காங்கிரஸ் 1
குழித்துறை பாஜக 2 வார்டுகளில் வெற்றி
சேலம்: 2 வார்டுகளில் தேமுதிக வெற்றி
திருவாரூர்: திமுக 4, காங். 2, அதிமுக 1 சுயேச்சை 3
குளச்சல்: திமுக 1, பாஜக 1
ஒட்டன்சத்திரம் திமுக 4 இடங்களில் முன்னணி
போடிநாயக்கனூர்: திமுக 6 அதிமுக 3
சிட்லபாக்கம்: திமுக 1 அதிமுக 1 வெற்றி
பள்ளிக்கரணை: 2 வார்டுகளில் திமுக வெற்றி, அதிமுக 1வெற்றி
விருதுநகர்: திமுக 5 வெற்றி, அதிமுக 2 வெற்றி
தாம்பரம்: 17ல் திமுக முன்னணி, அதிமுக 6
நாமக்கல்: திமுக 4, அதிமுக 2 சுயேச்சை 1 வெற்றி
வேலூர்: 2 வார்டுகளில் மதிமுக வெற்றி
தர்மபுரி: 1 வார்டில் அதிமுக வெற்றி
ஆலந்தூர் 18 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
உசிலம்பட்டி: 2 வார்டுகளில் திமுக வெற்றி
அரியலூர் : 3 வார்டுகளில் திமுக வெற்றி
கோவை: திமுக கூட்டணி 2 வார்டுகளில் வெற்றி
நெல்லை: 2 வார்டுகளில் திமுக வெற்றி
கும்பகோணம்: 9 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
திருச்செங்கோடு: 3 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
மதுரை மாநகராட்சி: 51வது வார்டில் திமுக வெற்றி
குழித்துறை நகராட்சி: 3 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
துறையூர் நகராட்சி: 2வது வார்டில் திமுக வெற்றி
பண்ருட்டி 4 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
திருச்சி மாநகராட்சி: 41வது வார்டில் திமுக வெற்றி

தேர்தல் முடிவுகள்

மாலை 2.30 நிலவரப்படி:

மதுரை மாநகராட்சி: திமுக 9, அதிமுக 3, தேமுதிக 2ல் வெற்றி.
கோவை மாநகராட்சி: திமுக 11, அதிமுக 2ல் வெற்றி.
திருச்சி மாநகராட்சி: திமுக 12, அதிமுக 3, தேமுதிக 1ல் வெற்றி.
சேலம் மாநகராட்சி: திமுக 4, தேமுதிக 2ல் வெற்றி.
நெல்லை மாநகராட்சி: திமுக 7, அதிமுக 3ல் வெற்றி.
சீர்காழி: அதிமுக 1, திமுக 1 வெற்றி.
நாகை: அதிமுக 7, திமுக 2 வெற்றி.
வேதாரண்யம்: அதிமுக 2, திமுக 2 வெற்றி.
செங்கல்பட்டு: திமுக 2, அதிமுக , தேமுதிக 2ல் வெற்றி.
எண்ணூர்: அதிமுக 2, திமுக 2 தேமுதிக 1ல் வெற்றி.
மணலி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
திருத்தணி: திமுக 3, அதிமுக1ல் வெற்றி.
செங்கோட்டை: திமுக 10, அதிமுக 3, தேமுதிக 1ல் வெற்றி.
சிவகாசி: திமுக 5, அதிமுக 1ல் வெற்றி.
ஆவடி: அதிமுக 3, திமுக 2ல் வெற்றி.
சின்னமனூர்: திமுக 2, மற்றவை 2ல் வெற்றி.
சிதம்பரம்: திமுக 1ல் வெற்றி.
கடலூர்: திமுக 7, அதிமுக 1ல் வெற்றி.
திண்டிவனம்: திமுக 1ல் வெற்றி.
எடப்பாடி: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
தாராபுரம்: திமுக 4 வார்டுகளில் வெற்றி.
திருமங்கலம்: அதிமுக 4, திமுக, 2, தேமுதிக 2ல் வெற்றி.
திருவாரூர்: திமுக 12, அதிமுக 2ல் வெற்றி.
சேலம்: திமுக, பாமக, தேமுதிக தலா 2 வார்டுகளில் வெற்றி.
திருவாரூர் நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது.
கோபி: திமுக 4, அதிமுக 1ல் வெற்றி.
குளச்சல்: சுயே. 10, திமுக 1ல் வெற்றி.
கத்திவாக்கம்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
மேலூர்: திமுக 4, அதிமுக 3ல் வெற்றி.
மயிலாடுதுறை: திமுக, அதிமுக தலா 1ல் வெற்றி.
பொள்ளாச்சி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
ராஜபாளையம்: திமுக 10, அதிமுக 3, தேமுதிக 2ல் வெற்றி.
சங்கரன்கோவில்: திமுக 3, அதிமுக 2ல் வெற்றி.
செய்யாறு: திமுக 3ல் வெற்றி.
சிவகங்கை: அதிமுக 1ல் வெற்றி.
திருத்துறைப்பூண்டி: திமுக 12ல் வெற்றி
திருவண்ணாமலை : அதிமுக 4, திமுக 3ல் வெற்றி.
உசிலம்பட்டி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
நெல்லை: திமுக 7, அதிமுக 3ல் வெற்றி.
சேலம்: தேமுதிக 1 வெற்றி
அம்பத்தூர்: அதிமுக 1 வார்டில் வெற்றி.
அருப்புக்கோட்டை: திமுக 4, அதிமுக 2ல் வெற்றி.
பவானி: திமுக 6ல் வெற்றி.
போடி: திமுக 6, அதிமுக 3ல் வெற்றி.
திண்டுக்கல்: திமுக 12, அதிமுக 7ல் வெற்றி.
எடப்பாடி: திமுக 3, அதிமுக 1ல் வெற்றி.
ஓசூர்: திமுக 6, அதிமுக 1ல் வெற்றி.
காரைக்குடி: திமுக 5 வார்டுகளில் வெற்றி.
மன்னார்குடி: அதிமுக 5, திமுக 3ல் வெற்றி.
ஊட்டி: திமுக 4, மற்றவை 8ல் வெற்றி.
பரமக்குடி: திமுக 2, அதிமுக 1ல் வெற்றி.
பழனி: திமுக 4, அதிமுக 4ல் வெற்றி.
மதுரை: திமுக 7 தேமுதிக 1 வெற்றி
ஆத்தூர்: திமுக 5, பாமக 1, அதிமுக 2 வெற்றி.
விருத்தாச்சலம்: திமுக 3, அதிமுக 1 வெற்றி.
சீர்காழி: திமுக 2, அதிமுக 1 வெற்றி.
மேட்டூர்: திமுக 3 , சுயே 1 வெற்றி
சேலம்: அதிமுக 4, திமுக 1 வெற்றி.
திருச்சி மாநகராட்சி: திமுக 4, மதிமுக 1, அதிமுக 1, கம்யூனிஸ்ட் 1
நெல்லை: முதல் வார்டுகளில் அதிமுக வெற்றி
குற்றாலம் பேரூராட்சி: திமுக வெற்றி
கிருஷ்ணகிரி: திமுக 3, தேமுதிக 1, சுயேட்சை 2, காங் 1, அதிமுக 1
கோவை மாநகராட்சி : திமுக 2, மார்க்சிஸ்ட் 1, காங்.1, அதிமுக 1, சுயேட்சை 1
பெரியகுளம்: திமுக 3 வெற்றி அதிமுக 2 வெற்றி
தேனி: அதிமுக 3 வெற்றி, திமுக 1 வெற்றி
திருவள்ளூர்: அதிமுக 4 வெற்றி, திமுக 3 வெற்றி
தூத்துக்குடி: திமுக 4 வெற்றி
காரைக்குடி: திமுக 6 வார்டுகளில் வெற்றி
கூத்தாநல்லூர்: திமுக 10, அதிமுக 2
கரூர்: திமுக 6, அதிமுக 3
திருத்துறைப்பூண்டி: திமுக 6, காங். 1
ஈரோடு: 83 பேரூராட்சி வார்டுகளில் 25ல் திமுக வெற்றி, சுயே. 32
நாமக்கல்: திமுக, அதிமுக தலா 6 வார்டுகளில் வெற்றி
விழுப்புரம்: திமுக 20, அதிமுக 15
பல்லாவரம்: திமுக 26 வார்டுகளில் முன்னணி
மேல் விஷாரம்: திமுக 9, அதிமுக 5, காங். 2, சுயேச்சை 1
கன்னியாகுமரி: 6 சுயேச்சைகள் வெற்றி
அரக்கோணம்: திமுக 7, அதிமுக 1
குடியாத்தம்: திமுக 3, அதிமுக 1, சுயேச்சை 1
திருப்பத்தூர்: திமுக 1
ராணிப்பேட்டை: திமுக1, காங்கிரஸ் 1
குழித்துறை பாஜக 2 வார்டுகளில் வெற்றி
சேலம்: 2 வார்டுகளில் தேமுதிக வெற்றி
திருவாரூர்: திமுக 4, காங். 2, அதிமுக 1 சுயேச்சை 3
குளச்சல்: திமுக 1, பாஜக 1
ஒட்டன்சத்திரம் திமுக 4 இடங்களில் முன்னணி
போடிநாயக்கனூர்: திமுக 6 அதிமுக 3
சிட்லபாக்கம்: திமுக 1 அதிமுக 1 வெற்றி
பள்ளிக்கரணை: 2 வார்டுகளில் திமுக வெற்றி, அதிமுக 1வெற்றி
விருதுநகர்: திமுக 5 வெற்றி, அதிமுக 2 வெற்றி
தாம்பரம்: 17ல் திமுக முன்னணி, அதிமுக 6
நாமக்கல்: திமுக 4, அதிமுக 2 சுயேச்சை 1 வெற்றி
வேலூர்: 2 வார்டுகளில் மதிமுக வெற்றி
தர்மபுரி: 1 வார்டில் அதிமுக வெற்றி
ஆலந்தூர் 18 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
உசிலம்பட்டி: 2 வார்டுகளில் திமுக வெற்றி
அரியலூர் : 3 வார்டுகளில் திமுக வெற்றி
கோவை: திமுக கூட்டணி 2 வார்டுகளில் வெற்றி
நெல்லை: 2 வார்டுகளில் திமுக வெற்றி
கும்பகோணம்: 9 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
திருச்செங்கோடு: 3 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
திருச்சி மாநகராட்சி: 3 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
நெல்லை மாநகராட்சி: 3 வார்டுகளில் அதிமுக வெற்றி
மதுரை மாநகராட்சி: 4 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
மதுரை மாநகராட்சி: 51வது வார்டில் திமுக வெற்றி
குழித்துறை நகராட்சி: 3 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி
துறையூர் நகராட்சி: 2வது வார்டில் திமுக வெற்றி
பண்ருட்டி 4 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னணி
திருச்சி மாநகராட்சி: 41வது வார்டில் திமுக வெற்றி

நன்றி: தட்ஸ் தமிழ்

அதிமுகவிலிருந்து ராதிகா நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அதிமுக கட்சியிலிருந்து ராதிகா சரத்குமாரை நீக்குவதாக ஜெயலலிதாவால் அறிக்கப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை - கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், நடிகை ராதிகா சரத்குமார், கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், நடிகை ராதிகா சரத்குமார், அ.இ.அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்றும் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

(தேர்தல் பிரச்சாரம் செய்ய மறுப்பு, சன் டிவியிலிருந்து தொலைக்காட்சித் தொடர்களை நீக்க மறுத்தது, ஜெயா டிவியுடன் ஒப்பந்தம் செய்யாத்து ஆகியவையே கட்சி விரோத நடவடிக்கைகள் என கருதப்படுகிறது.)

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல் வன்முறை வழக்கு காரணமாக சென்னை மாநகராட்சி தவிர பிற உள்ளாட்சி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி தேர்தலில் கலவரம் நடந்ததாக வழக்கு எதிரொலி
சென்னையில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்
தமிழகத்தின் மற்ற இடங்களின் முடிவு இன்று தெரியும்

மாநகராட்சி தேர்தலில் கலவரம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு எதிரொலியாக, சென்னையில் இன்று மாலை வரை ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழகத்தின் மற்ற இடங்களில், திட்ட மிட்டபடி ஓட்டு எண்ணிக்கை தொடங்கி இன்று முடிவுகள் வெளியாகும்.

சென்னை, அக்.18-

தமிழ்நாட்டில், கடந்த 13 மற்றும் 15-ந்தேதிகளில், இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.

மாநகராட்சி, நகராட்சி உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அ.தி.மு.க. வழக்கு

கடந்த 13-ந்தேதி நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் கலவரம் நடந்து, கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், இந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று அ.தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மாநகராட்சியின் 155 வார்டுகளிலும் தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்தவேண்டும் என்று, மனுதாரர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில், நேற்று 2-வது நாளாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையர் சார்பில் தமிழக அரசின் தலைமை வக்கீல் ஆர்.விடுதலை ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின்போது, மாநகராட்சி தேர்தலில் வன்முறைகள் நடந்தபோது, தேர்தல் அதிகாரிகள் விதிமுறைகளை கடைப்பிடித்தனரா? என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினார்கள்.

ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்

எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என்று முடிவுக்கு வர தேர்தல் ஆணையத்துக்கு 5 நிமிடங்கள் அவகாசம் அளித்த நீதிபதிகள், அப்படி நீங்களே முடிவு எடுக்காவிட்டால் விரும்பத்தகாத இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் கலந்து பேசிய தலைமை வக்கீல் விடுதலை, விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று கோர்ட்டு நேரம் முடியும் வரை சென்னை மாநகராட்சி பகுதி ஓட்டுகளை எண்ணமாட்டோம் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அவர் உத்தரவாதம் அளித்தார்.

பிற்பகல் 2.30 மணிக்கு.....

அதைத்தொடர்ந்து, "கோர்ட்டில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து எந்தெந்த வார்டுகளில் மறுதேர்தல் நடத்தப்படும் என்பதை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கோர்ட்டில் தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து, சென்னை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை, இன்று மாலை வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

மற்ற இடங்களில்

சென்னை மாநகராட்சி தவிர, தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் ஓட்டு எண்ணிக்கை திட்டமிட்டபடி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முற்பகல் முதல் முடிவுகள் வெளிவரத்தொடங்கும்.

செய்தி: தினத்தந்தி

Tuesday, October 17, 2006

மதுரையில் திமுக வெற்றி

பழனிவேல்ராஜன் மறைவை அடுத்து மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு விவரம்:
கவுஸ்பாட்சா-திமுக 50,994 (56%)
ராஜன் செல்லப்பா-அதிமுக 19,909 (23%)
பன்னீர்செல்வம்-தேமுதிக 17,394 (20%)

இரண்டாவதாக வந்த அதிமுக வேட்பாளரைவிட 31085 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட வாக்கு வித்தியாசம் அதிகம். அதிமுக தேமுதிக இரண்டும் பெற்ற வாக்குகளை கூட்டினாலும் திமுக வாக்குகள் அதைவிட அதிகம்.

அதிமுக வாக்குகளையே தேமுதிக பிரித்துள்ளதாக தெரிகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக 38.2 சதவீத வாக்குகளைப்பெற்றிருந்தது. திமுக 45.83 சதவீதம்பெற்றது. இம்முறை திமுகவுக்கு மேலும் 11 சதவீதம் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது. அதே சமயம் அதிமுக 18 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. அந்த வாக்குகளையே தேமுதிக பெற்றிருக்க வேண்டும். அதிகப்படியாக இம்முறை வாக்களித்த புதிய வாக்காளர்களில் பலரும் திமுக அணிக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பதாக தோன்றுகிறது. சிறிய அளவு தேமுதிகவுக்கு கிடைத்திருக்கலாம்.

Saturday, October 14, 2006

தேர்தல்வன்முறை வழக்கு விசாரணை

சென்னை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. வழக்கு பதில் தருமாறு தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, அக். 14-

சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுபற்றி பதில் தருமாறு மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க. வழக்கு

நேற்று காலையில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை, 40-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வக்கீல்கள் சந்தித்து சென்னை மாநகராட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், இந்த வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறினார்கள்.

உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று ஐகோர்ட்டுக்கு விடுமுறை ஆகும். இருந்தபோதிலும் இந்த வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்தார்.

நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர், அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிப்பார்கள் என்று பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது. ஐகோர்ட்டு பதிவாளர் மற்றும் அதிகாரிகள் காலை 12 மணிக்கே கோர்ட்டுக்கு வந்துவிட்டனர். மதியம் அ.தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 மணிக்கு தான் அ.தி.மு.க சார்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மீனவ அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அ.தி.மு.க. கூறியிருப்பதாவது:-

திட்டமிட்டு தாக்குதல்

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அதிக அளவில் வாக்குகளை பெற்று சென்னையில் வெற்றி பெற்றது. இதனால் மாநகராட்சி தேர்தலில் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொள்ளாமல் தி.மு.க.வினர் திட்டமிட்டு தேர்தலின்போது அராஜகத்தில் ஈடுபட்டனர். 155 வார்டுகளிலும் புகுந்து பூத் ஏஜெண்டுகளை தாக்கி ஓட்டு சாவடியை கைப்பற்றி விட்டனர். போலீசார் துணையுடன் வாக்குசாவடிக்குள் நுழைந்தனர்.

ஓட்டுபெட்டியை கைப்பற்றி

ஓட்டுப்பெட்டியையும், வாக்கு சீட்டுகளையும் கைப்பற்றி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போட்டுள்ளனர். இதுபற்றி கூடுதல் போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர் பதில் தெரிவிக்கும் நிலையில் இல்லை.

வாக்களிக்க வந்த அ.தி.மு.க.வினர் பல இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் வேட்பாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

உயிருக்கு பயந்து ஓட்டம்

ஒரு வாக்குசாவடியை கைப்பற்றி அதில் உள்ள ஓட்டுப்பெட்டியை தூக்கி கொண்டு வந்து மரத்தடியில் வைத்து கள்ள ஓட்டு போடப்பட்டது. இதை அ.தி.மு.க.வினர் கண்டு அவர்களிடம் இருந்த வாக்குசீட்டுகள் மற்றும் முத்திரைகளையும் கைப்பற்றி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வந்துவிட்டனர்.

பல்வேறு ஓட்டுசாவடிகளில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் வக்கீல்கள் ஏஜெண்டுகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 27 வேட்பாளர்கள் வக்கீல்களாகும். இப்படிப்பட்ட வேட்பாளர்களே அடிவாங்கி உயிருக்கு பயந்து ஓடிவந்துவிட்டனர். இதிலிருந்து சென்னை தேர்தலில் ரவுடிகள் அராஜகம் நடந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. பல வாக்குசாவடிகள் மதியம் 12 மணிக்கே ஓட்டுப்பதிவு முடிந்ததாக கூறி ஓட்டுசாவடியை இழுத்து மூடிவிட்டனர்.

செல்லாது என்று அறிவிக்கவேண்டும்

155 வார்டுகளிலும் ரவுடிகள் மூலம் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு வாக்குசாவடிகள் கைப்பற்றப்பட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. ஏஜெண்டுகள் எல்லோரும் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை

நீதிபதிகள் முகோபாத்தியா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்பு நேற்று மாலை 5.15 மணிக்கு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. எம்.பி.யும், வக்கீலுமான என்.ஜோதி ஆஜராகி வாதாடினார். அவர் கோர்ட்டில் கூறியதாவது:-

வக்கீல் என்.ஜோதி:- வாக்குசாவடியில் தி.மு.க.வினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாக்குசீட்டுகளையும், முத்திரைகளையும் இக்கோர்ட்டில் தாக்கல் செய்கிறோம். வாக்குசீட்டுகள் அனைத்திலும் உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்ட நிலையில் உள்ளது. எனவே இந்த தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை ஓட்டு எண்ணுவதற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு வக்கீல் என்.ஜோதி வற்புறுத்தி வாதாடினார்.

ஐகோர்ட்டு பாதுகாப்பில்

115, 145, 147 வார்டுகளில் இந்த வாக்குசீட்டுகள் தி.மு.க.வினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வக்கீல் என்.ஜோதி தெரிவித்தார்.

இந்த வாக்குச்சீட்டுகளையும், 3 முத்திரைகளையும் கோர்ட்டு பாதுகாப்பில் வைக்கும்படி பதிவாளர் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த சூழ்நிலையில் அட்வகேட் ஜெனரல் ஆர்.விடுதலை கோர்ட்டில் வந்து ஆஜரானார். தான் தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜராவதாக தெரிவித்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்தார். வக்கீல் ஜோதி குறுக்கிட்டு ஓட்டு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மாநில தேர்தல் கமிஷன், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், தி.மு.க. போன்ற பிரதிவாதிகளிடம் பதில் கேட்டபிறகே எந்த உத்தரவுமë பிறப்பிக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதன்பிறகு மனுமீதான விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

மனுதாரர் சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்த வாக்குச்சீட்டுகளையும், முத்திரைகளையும் அட்வகேட் ஜெனரல் பார்வையிடலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தே.மு.தி.க.

தே.மு.தி.க. கட்சி சார்பில் பொதுச்செயலாளர் ராமுவசந்தன் இந்த வழக்கில் தன்னையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

அ.தி.மு.க. போலவே மனுவில் குற்றச்சாட்டுகளை கூறி சென்னை மாநகராட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கமிஷனர் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.விடுதலை நோட்டீசை பெற்றுக்கொண்டார். தி.மு.க. சார்பில் வக்கீல் ஜே.ரவீந்திரனும், போலீஸ் சார்பில் வக்கீல் ஸ்ரீகாந்தும் நோட்டீசை பெற்றுக்கொண்டனர். இதன்பிறகு வழக்கு விசாரணையை வரும் 16-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்குள் தேர்தல் கமிஷனர், டி.ஜி.பி., தி.மு.க. ஆகியவை பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையின்போது காயமடைந்த பலர் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

கூச்சல்-குழப்பம்

இந்த வழக்கையொட்டி பிற்பகலில் இருந்தே நூற்றுக்கு மேற்பட்ட அ.தி.மு.க.வினர் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர். பலர் காயத்துடன் தலை, கை போன்றவற்றில் கட்டுப்போட்ட நிலையில் வந்திருந்தனர். கோர்ட்டுக்குள்ளும், வெளியிலும் கூடியிருந்தனர். நீதிபதிகள் கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பாக மின் இணைப்பில் அடிக்கடி தடை ஏற்பட்டது.

கோர்ட்டுக்குள் விளக்குகள் அணைந்தபோது சினிமா கொட்டகையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்வதுபோல கோர்ட்டுக்குள் இருந்த அ.தி.மு.க.வினர் ஆரவாரம் செய்தனர். வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்ததும் கோர்ட்டு வளாகத்திற்குள் கூடி போலீசாருக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக கோஷமிட்டனர்.

செய்தி : தினத்தந்தி

Friday, October 13, 2006

தேர்தல் வன்முறை-2

விறுவிறுப்பான வாக்குப்பதிவு! சென்னை மாநகராட்சி

சென்னை, அக். 13-
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடந்தது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. பெண்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். எல்லா பூத்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய 4 மாநகராட்சிகள், 45 நகராட்சிகள், 23 மூன்றாம் நிலை நகராட்சிகள், 281 பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி, சிற்றூராட்சிகள் உள்பட மொத்தம் 28 ஆயிரத்து 479 உள்ளாட்சி அமைப்புகளில் 67 ஆயிரத்து 760 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்க எல்லா இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழக போலீசாருடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநில போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழகம் முழுவதும் காலையில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகின்றனர். பல இடங்களில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

சில இடங்களில், ஓட்டுச்சீட்டுகளில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்கள் மாறி இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. அந்த இடங்களில் மாற்று ஏற்பாடுகளுடன் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. கள்ள ஓட்டு போடுவதாக கூறி பல இடங்களில் அரசியல் கட்சியினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 155 வார்டுகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. இதில், 1,326 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநகர் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 295 வாக்குச்சாவடிகளில் 16 ஆயிரத்து 475 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். எல்லா வார்டுகளிலும் காலையிலேயே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

முதல்வர் கருணாநிதி, கோபாலபுரம் 112-வது வார்டில் உள்ள சாரதா மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணிக்கு ஓட்டு போட்டார். அவருடன் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வரின் குடும்பத்தினரும் வந்து ஓட்டு போட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் வந்து 113-வது வார்டு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.
சென்னை பெசன்ட் நகர் அறிஞர் அண்ணா பள்ளியில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து 50 ஓட்டு சீட்டுக்களை கைப்பற்றிச் சென்றது. மீன்பிடி துறைமுகம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் கள்ள ஓட்டு போடப்படுவதாக கூறி ம.தி.மு.க.வினர் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிந்தாதிரிப்பேட்டை கொருவப்பா செட்டி தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கள்ள ஓட்டு போடுவதாக கிடைத்த தகவலின்பேரில் ம.தி.மு.க. வேட்பாளர் சேகர் தலைமையில் சிலர் அங்கு விரைந்தனர். வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றிருந்த பொதுமக்களிடம் சென்று, Ôஇங்கு கள்ள ஓட்டு போடப்படுகிறதாÕ என சேகர் விசாரித்தார். இதைக் கேட்டு கோபமடைந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த அடையாள அட்டையை காட்டி ‘எங்களுக்கு இதே பகுதிதான், நாங்கள் கள்ள ஓட்டு போட வரவில்லைÕ என கூறி வாக்குவாதம் செய்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் சேகர் கீழே விழுந்தார். காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அசோக் நகர் ஜவகர் வித்யாலயா பள்ளிக்குள் அ.தி.மு.க.வினர் புகுந்து 3 ஓட்டுப் பெட்டிகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் ஓட்டுப் பதிவு பாதிக்கப்பட்டது.
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மற்றும் ஓட்டேரியில் ஆயிரத்து 500 அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். டிரஸ்ட்புரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நக்கீரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர். நகர், காமராஜர் ரோடு - அண்ணா மெயின் ரோடு சந்திப்பில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒரு கும்பல் புகுந்து பொதுமக்களை அடித்து விரட்டி ஓட்டு போடவிடாமல் தடுத்தது. இதை அறிந்த தி.மு.க.வினர் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரையருவர் கல் வீசி தாக்கிக் கொண்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். கல் வீச்சில் ஒரு போலீஸ்காரரின் மண்டை உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிந்தாதிரிப்பேட்டை தீவுத் திடல் அருகே கேந்திர வித்யாலயா பள்ளியில் அ.தி.மு.க.வினர் புகுந்து 3 ஓட்டுப் பெட்டிகளை அடித்து உடைத்தனர். அங்கு ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. திருவான்மியூர் ஜூனியர் இன்ஜினியர் அலுவலகம் அருகே துரைப்பாக்கம் உதவி கமிஷனர் பாஸ்கர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராணியின் கணவர் குணசேகர், தனது ஆதரவாளர்களுடன் ஒரு டாடா சுமோ, 2 குவாலிஸ் கார்களில் கள்ள ஓட்டு போட வந்தார். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். கார்களையும் கைப்பற்றினர்.

தேர்தல் கலாட்டா

சென்னை, அக். 13-
?சென்னையின் 132வது வார்டு அதிமுக வேட்பாளர் கடும்பாடியின் ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் வில்லியம்ஸ் ஆதரவாளர்களுக்கும் இன்று காலை 8 மணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. இந்நிலையில், உதயம் தியேட்டர் எதிரே உள்ள அண்ணா சமூகநல கூட வாக்குச் சாவடிக்கு 9.15க்கு ஆதரவாளர்களுடன் கடும்பாடி வந்தார். கள்ள ஓட்டு போட அவர்கள் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கடும்பாடியும் 20 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

?131வது வார்டில் அதிமுக - பாமக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸ் தடியடி நடத்தினர்.
?14வது வார்டின் மூன்று பூத்களிலும் 500க்கு மேல் கள்ள ஓட்டு போட்டதாக எண்ணூர் ஹைரோடு சூரியநாராயணன் தெரு அருகில் மதிமுக வேட்பாளர் ராஜவள்ளி தலைமையில் ஆதரவாளர்கள் காலை 8.15க்கு மறியல் செய்தனர். ஆனால், அப்போது வரை மொத்த வாக்குகளே 194தான் பதிவாகியிருந்தன. ஒன்றரை மணி நேரம் நடந்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் முடியும் நேரத்தில், மொத்தம் 249 ஓட்டுகள் பதிவாகியிருந்தன.

? 109வது வார்டு தேனாம்பேட்டையின் மாநகராட்சி மாதிரி பள்ளியில் 1680, 81 ஆகிய இரண்டு பூத்களில் தேமுதிக வேட்பாளர் தங்கமணியின் மகன் ரஞ்சித் அத்துமீறி புகுந்து, வாக்குச் சீட்டுகளை பறித்துச் சென்றார். இதனால், 9 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அவர் எடுத்துச்சென்ற வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக, வேறு சீட்டுகள் கொண்டு வரப்பட்டு, 9 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்தது. வாக்குச்சாவடி அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித்தை போலீசார் தேடிவருகின்றனர்.

அதிமுக&பாமக மோதல் வாக்குப்பதிவு நிறுத்தம்
80-வது வார்டில் பரபரப்பு

சென்னை, அக். 13-
சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட 80வது வார்டில் வாக்குப்பதிவு நடந்துகொண்டிருந்தபோது, அதிமுகவினர் - பாமகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குப் பெட்டிகள், சாவடியின் கதவு, ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 700 பேர் ஓட்டு போட்ட நிலையில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சியின் 80வது வார்டில் அதிமுக பெண் வேட்பாளர் நாகமணி, பாமக வேட்பாளர் ஏழுமலை மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தையில் சீட் கிடைக்காததால், கணேசன் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

பல்லவன் சாலை கேந்திர வித்யாலயா பள்ளியின் 8 பூத்களில் இந்த வார்டுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்தில் 700 ஓட்டுகள் பதிவான நிலையில், வாக்குச் சாவடிக்குள் கணேசன் நுழைந்தார். Ôஅதிகளவில் கள்ள ஓட்டு போடப்படுகிறது. தேர்தலை நிறுத்த வேண்டும்Õ என்று கூறி ரகளை செய்தார். அப்போது, அதிமுக வேட்பாளர் நாகமணியின் ஆதரவாளர்களும் உள்ளே புகுந்து கோஷம் எழுப்பினர். மோதலில் ஈடுபட்டனர்.

பள்ளியின் 3வது பூத்தில் நுழைந்த அதிமுகவினர் வாக்குப் பெட்டிகளையும் ஜன்னல், கதவுகளையும் உடைத்தனர். அடுத்த சிறிது நேரத்தில், மற்ற பூத்களிலும் கலவரம் ஏற்பட்டது. வாக்குச்சீட்டு, பெட்டி, மை உட்பட எல்லாவற்றையும் அதிமுகவினர் சூறையாடிச் சென்றதையடுத்து, அரை மணி நேரத்தில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

இதனால், பாமகவினருக்கும் அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் அடித்துக்கொண்டனர். இதில் நாகமணியின் மகன் தனசேகர், கணவர் ஆறுமுகம் ஆகியோருக்கு சரமாரியாக வெட்டு விழுந்தது.

அதிமுக மறியல்: பஸ்கள் உடைப்பு சென்னையில் 200 பேர் கைது

சென்னை, அக். 13-
சென்னையில் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கலவரத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்படுவதாக கூறி அ.தி.மு.க.வினர் தகராறு செய்தனர். ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தி.நகர், சூளைமேடு, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், அசோக்நகர், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய இடங்களில் மறியல் நடந்தது. தி.நகர் பஸ் நிலையம் அருகே தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கலைராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆந்திர போலீசார் மீது கல் வீசி தாக்கினார்கள். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவான்மியூரில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் குணசேகரன் தலைமையில் கள்ள ஓட்டு போட முயன்ற சிலர் கைது செய்யப்பட்டனர். எழும்பூர் கோர்ட் அருகே புதுப்பேட்டை சாலையில் 106-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் பாலகங்கா, தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். பாலகங்கா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாநகர போக்குவரத்து பஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தலைமை நீதிபதியிடம் அதிமுக முறையீடு

சென்னை, அக். 13-
சென்னையில் பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டு வருவதாகவும், உடனடியாக தேர்தலை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் அதிமுக முறையிட்டுள்ளது.
அதிமுக எம்.பி. ஜோதி, இன்று காலை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா வீட்டுக்கு சென்று அவரிடம் வாய்மொழியாக ஒரு புகார் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சித் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை. பல இடங்களில் கள்ள ஓட்டுகள் போடப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, தேர்தலை உடனடியாக நிறுத்த வேண்டும். மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மாநில தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
இது குறித்து அவசர விசாரணை நடத்த வேண்டும்Õ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, மதியம் 2 மணிக்கு இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாக தெரிவித்தார்.

தோல்விக்கு ஜெயலலிதா சொல்லும் காரணம் கருணாநிதி பதிலடி

சென்னை, அக். 13-
சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா மேல்நிலைப்பள்ளிக்கு காலை 9 மணிக்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மனைவி ப்ரியாவுடன் வந்து ஓட்டு போட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி, மனைவி தயாளு அம்மாள், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் வாக்களித்தனர்.
வெளியே வந்த முதல்வரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் கூறியதும்:
திமுக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பிரகாசமாக உள்ளது.
கள்ள ஓட்டு போட திமுக திட்டமிட்டிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
தோல்விக்கு அவர் சொல்லும் காரணம்தான் இது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

செய்தி: தமிழ்முரசு

தேர்தலில் வன்முறை

சென்னை மாநகராட்சி ஓட்டுப்பதிவில் வன்முறை:
அ.தி.மு.க.-ம.தி.மு.க. வேட்பாளர்கள் மீது தாக்குதல்


சென்னை, அக். 13-

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை, கோவை, சேலம், நெல்லை ஆகிய 4 மாநகராட்சி, 45 நகரசபை, 23 மூன்றாம் நிலை நகரசபை, 281டவுன் பஞ்சாயத்து, 6557 கிராம பஞ்சாயத்துக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.

முதல் கட்ட ஓட்டுப்பதிவுக் காக 42 ஆயிரத்து 206 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப் பட்டிருந் தன. தமிழக போலீசாருடன் பக்கத்து மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த 23 கம் பெனி போலீசார், 20 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர், 20 ஆயிரம் என்.எஸ்.எஸ். பிரிவினர், 500 வனத்துறை ஊழியர்கள், 1100 தீயணைப்பு வீரர்கள், 9 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 2 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர்.

இன்று தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் 5423 இடங்களில் வன்முறை ஏற்பட லாம் என்று கருதப்பட்டதால் அங்கு அதிரடிப்படை வீரர் கள் நிறுத்தப்பட்டனர். காலை 7 மணிக்கு வாக்காளர் கள் ஆர்வமுடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர். ஆனால் மக்கள் அமைதியாக வாக்களிக்க இயலவில்லை.

சென்னையில் 155 வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்ருந்த 3295 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதில் 1177 பகுதிகளில் பிரச்சினை ஏற்பட லாம் என்று கூடுதல் போலீ சார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

ஓட்டுப்பதிவு தொடங்கியசில நிமிடங்களில் சென்னை யில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. மயிலாப்பூர், சிந்தா திரிப்பேட்டை, ஆயிரம் விளக்கு மற்றும் வட சென்னை பகுதிகளில் வாக்கு சாவடி களில் மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

113-வது வார்டுக்கான ஓட்டுச்சாவடி அமைந்துள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக் குள் சைதை பாலாஜி என்ப வர் தலைமையில் சிலர் கும்ப லாக வந்தனர். அவர்கள் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டுச்சீட்டுக்களை எடுத்து தாங்களாகவே முத்திரை குத்திப் போட்டனர். இதற்கு அ.தி.மு.க. `பூத்' ஏஜெண்டு சண்முகம் எதிர்ப்பு தெரிவித் தார்.

அவரை அந்த கும்பல் தாக்கியது. இதில் சண்முகம் மூக்கு கண்ணாடி உடைந்தது. அவர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் கண்டு கொள்ளாததால் அத்துமீறி வந்த கும்பல் கள்ள ஓட்டு போட்டு விட்டு சென்று விட்டது.

ஜாம்பஜார், நாகேசுவரராவ் பூங்கா, ஜாபர்கான்பேட்டை பகுதிகளில் ஏராளமானவர்கள் கும்பல், கும்பலாக வந்து கள்ள ஓட்டு போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடித்து துரத்தப்பட்டனர். இதனால் பல இடங்களில் வாக்காளர்களிடையே பீதி ஏற்பட்டது.

இதை பயன்படுத்தி பல இடங்களில் ஏராளமான கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன. சென்னையில் பல இடங்களில் குடிசைவாசி பகுதி மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப் படவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதி 8-வது வார்டில் உள்ள 192-வது எண் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போடப்படுவதாக அ.தி.மு.க.வினர்குற்றம் சாட்டினர். ஒருவர் கட்டாககொண்டு வந்த வாக்குச் சீட்டை வடசென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன் பறித்தார்.

அங்கு தி.மு.க.-அ.தி.மு.க. வினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. மோதலுக்கு தயார் ஆனார்கள். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

சைதாப்பேட்டை 135-வது வார்டில் உள்ள 21 மற்றும் 25-வது எண்கள் கொண்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க ஆண்களும், பெண் களும் திரண்டிருந்தனர். காலை 7.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் அங்கு புகுந்தது.

வாக்களிக்க நின்றவர்களை யும், அ.தி.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டுகளை அடித்து விரட்டினர். இதை தடுத்ததேர்தல் பணியாளர் மிரட் டப்பட்டனர். வாக்கு சாவடி களை ஒரு கும்பல் கைப்பற் றியது. அவர்கள் வாக்களிக்க வந்தவர்கள் பெயர்களை மட்டும் பதிவு செய்து கொண்டு கள்ள ஓட்டு போட்டனர்.

வாக்குசாவடி கைப்பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 135-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் விஜயா வந்தார். அவருடன் ம.தி.மு.க. நிர்வாகிகள் மதியழகன், வெங்கட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி யினர்கள்ள ஓட்டு போடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த கும்பல் உருட்டுக்கட்டைகளால் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் விஜயாவை தாக்கினர் உடன் வந்தவர்களும் தாக்கப்பட்டனர். மேலும் சுயேட்சை பெண் வேட் பாளர்களான அமுதா, பரிமளா, விஜயலட்சுமி, மஞ்சுளா, டெல்லிபாய் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.

இதனை அங்கு நின்ற போலீசார்கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. போலீசாரை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷம் போட்டனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனையடுத்து சைதாப் பேட்டை இன்ஸ்பெக்டர் ராதா கிஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் அ.தி.மு.க.வேட்பாளர் விஜயா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 6 பேரையும் அவருடன் வந்த 50க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள டி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

சேப்பாக்கம் பகுதி 81-வது வார்டு ம.தி.மு.க. வேட்பாளர் மார்க்கெட் சேகரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. கள்ள ஓட்டு போட முயன்றதைதடுத்ததால் ஒரு கும்பல் அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

147, 151-வது வார்டுகளில் உள்ள வாக்கு சாவடிகளை கார்களில் வந்த ஒரு கும்பல் கைப்பற்றியது. அங்கிருந்த அ.தி.மு.க., ம.தி.மு.க. பூத் ஏஜெண்டுகளை அந்த கும்பல் அடித்து வெளியேற்றியது. ஓட்டு போட வந்த பொதுமக்கள் ஓட்டு போடாமல் பயந்து ஓட்டம் பிடித்தனர்.

ராயபுரம் 19-வது வார்டில் வாக்கு சாவடிக்குள் ஒரு கும்பல் புகுந்து கைப்பற்றியது. பட்டேல் நகர் வாக்கு சாவடியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நேதாஜி கணேசன் என்பவர் மேற்பார்வையாள ராக இருந்தார். அவரை தி.மு.க.வைச் சேர்ந்த கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் 108-வது வார்டில் காலை 8.30 மணிக்கு ஒரு கும்பல் வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து கள்ள ஓட்டு போட்டது. இதற்கு அ.தி. மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த கும்பல் கத்தியை காட்டி கள்ள ஓட்டுக்களை பதிவு செய்தது.

பாதுகாப்புக்கு நின்ற போலீ சார் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டனர். கள்ள ஓட்டு போடப்படும் தகவல் அறிந்ததும் 108-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் நுங்கை மாறன் அங்கு விரைந்தார். அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

போலீசார் எதையும் கண்டு கொள்ளாததால் நுங்கை மாறன் சாலை மறியல் செய்ய முயன்றார். உடனடியாக போலீசார் பாய்ந்து சென்று அவரை கைது செய்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறினார்கள்.

20-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் பிரபுராம். இவர் என்.என். கார்டன் வாக்கு சாவடி அருகில் நின்று கொண்டிருந்தார். அப் போது 50-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் திடீரென அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.8-வது வார்டு கார்னேசன் நகர் மாநகராட்சி பள்ளியில் வாக்குப்பதிவு நடந்த போது ஒரு கும்பல் புகுந்து சோடா பாட்டிலை உடைத்து ரோட்டில் வீசியது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கள்ள ஓட்டு போடுவதை போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்ததை கண்டித்து ராயபுரம் மெயின் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காசிமேடு மெயின் ரோட்டிலும் மறியல் செய்தனர். ரோட்டில் உட்கார்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

தண்டையார்பேட்டையில் தே.மு.தி.க. பெண் வேட்பாளர் ஒருவர் ரோட்டில் உருண்டு புரண்டு மறியல் செய்தார். போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 55-வது வார்டில் கள்ள ஓட்டு போட வந்த கும்பலை தே.மு.தி.க. வேட்பாளர் மதியழகன் தடுத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இதை அறிந்த தே.மு.தி.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்தி: மாலைமலர்

Wednesday, October 11, 2006

இடைத்தேர்தல் முடிந்தது

மதுரை மத்திய தொகுதியில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பி.டிஆர். பழனிவேல்ராஜன் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தி.மு.க. வேட்பாளராக கவுஸ்பாட்சா, அ.தி.மு.க. வேட்பாளராக ராஜன் செல்லப்பா, தே.மு.தி.க. வேட்பாளராக பன்னீர்செல்வம் உள்பட 19 பேர் களத்தில் உள்ளனர்.

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் மதுரையில் முகாமிட்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தனர்.

அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு இடைத் தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவுற்றது.

காலையிலேயே கட்சி தொண்டர்கள் கும்பல், கும்ப லாக ஓட்டு போட வந்தனர். அவர்களை வாக்கு சாவடி முன்பு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சோதனை செய்த பின்பே உள்ளே செல்ல அனு மதித்தனர். அவர்கள் வாக்கு சாவடி முன்பு வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

தி.மு.க. வேட்பாளர் கவுஸ்பாட்சா மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா. மகளிர் பள்ளியில் உள்ள வாக்கு சாவடிக்கு குடும்பத்துடன் சென்று ஓட்டு போட்டார்.

ஓட்டு சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு 100 அடி தூரத்திலேயே பாதுகாப்புக்கு நிற்கும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். மேலும் ஓட்டு போடுவதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என்பதை சரிபார்த்த பின்பே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதுதவிர ஓட்டு பதிவு தொடங்கியதுமே தேர்தல் அதிகாரிகளும் வாகனத்தில் ரோந்து சுற்றி வந்தனர். ஒவ்வொரு வாக்குசாவடிக்கும் சென்று அவர்கள் ஓட்டுபதிவை பார்வையிட்டு தில்லு முல்லுகள் எதுவும் நடக்கிறதா என்றும் கண்காணித்தனர்.

இதுபோல 154 வாக்கு சாவடிகளிலும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்த புகைப்படக்காரர்கள் மூலம் ஓட்டு பதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்காளர்களும் வீடியோ படம் எடுக்கப்பட்டனர்.

மத்திய தொகுதியில் உள்ள 154 வாக்கு சாவடிகளிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். 3 அடுக்கு முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதில் துணை ராணுவம், கர்நாடக அதிரடி படை, மாநில கமாண்டோ பிரிவு போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதுதவிர வாகனங்களிலும் போலீசார் உயர் அதிகாரி களுடன் ரோந்து சுற்றி வந்த னர். பதட்டமான பகுதிகளில் கலவரங்களை தடுக்கும் `வஜ்ரா' வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.

மத்திய தொகுதியில் மொத்தம் 1,32,263 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்வாக்காளர்கள் 66,333 பேரும், பெண்வாக்காளர்கள் 65,898 பேரும் உள்ளனர். 95 சதவீதம் பேருக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற அக்டோபர் 17 அன்று நடக்கிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. இது மின்னணு இயந்திர வாக்குப்பதிவு என்பதால் அன்று பிற்பகலுக்குள் யார் வெற்றி பெற்றார் என்பது தெரிந்து விடும்.

முதல்கட்ட பிரச்சாரம் முடிவு

தமிழ்க உள்ளாட்சித் தேர்தல்களுக்கான முதல்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவு பெற்றது. முதல் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் 13ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை சேலம், கோவை மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளுக்கும் 45 நகராட்சிகள், 23 கீழ்நிலை நகராட்சிகள், 281 நகர பஞ்சாயத்துகள், 195 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றில் முதல்கட்டத் தேர்தல் அக்டோபர் 13 அன்று நடைபெறுகிறது.

மீதமுள்ள தொகுதிகளுக்கு அக்டோபர் 15 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

Saturday, October 07, 2006

தேர்தல் கருத்து கணிப்பு

லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு முடிவு
* மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு
* கிராமங்களில் அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு
* இளைஞர்கள் மத்தியில் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு

சென்னை, அக்.7-

மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், கிராமங்களில் அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாகவும், இளைஞர்கள் மத்தியில் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு இருப்பதாகவும் லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

லயோலா கல்லூரி ஊடக ஆய்வியல் புலம் சார்பில மாநில அளவில் ``மாற்று அரசியல் பண்பாடு நோக்கி...'' என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை கல்லூரி முதல்வர் ஆல்பர்ட் முத்துமாலை நேற்று வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றி பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மத்திய தொகுதி

மதுரை மத்திய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அக்டோபர் 1, 2 ஆகிய நாட்களில் அந்தத் தொகுதியில் உள்ள 15 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கு 80 முதல் 90 பேர் வரை என மொத்தம் ஆயிரத்து 260 நபர்களிடம் கருத்து சேகரிக்கப்பட்டது.

மதுரை மத்திய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு 51.2 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 22.6 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 17.6 சதவீதம் பேரும் ஓட்டுப் போடுவோம் என்று கூறினார்கள்.

ஓட்டுப் போடுவது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று 6.2 சதவீதம் பேரும், யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது பற்றி கருத்து சொல்ல முடியாது என்று 2.4 சதவீதம் பேரும் தெரிவித்தனர்.

ஓட்டு வங்கி

மே மாதத் தேர்தலின்போது தி.மு.க. 45.8 சதவீத ஓட்டுகள் பெற்றி ருந்தது. தற்போது 5.4 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. தே.மு.தி.க.வுக்கு மே மாத தேர்தலில் 12.8 சதவீத வாக்குகள் கிடைத்தன. இப்போது 4.8 சதவீத வாக்குகள் அதிகமாக கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. அ.தி.மு.க.வுக்கு மே மாத தேர்தலில் 38.2 வாக்குகள் கிடைத்தன. இப்போது 15.6 சதவீத ஓட்டுகள் குறைவாகக் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

பெண்களை பொறுத்தவரை தி.மு.க.வுக்கு 56.1 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 17.1 சதவீதம் பேரும், தே.மு.தி.க.வுக்கு 15.4 பேரும் ஓட்டுப் போட முடிவு செய்திருப்பதாக கூறினார்கள்.

தனியார் துறையில் பணிபுரிவோர் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் தே.மு.தி.க.வுக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் நிலவரம்

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் கிராம பஞ்சாயத்துகளில் மட்டும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

கிராமங்களில் சிக்குன் குனியா நோய் பரவலாக உள்ளது. ``இந்த விஷயத்தில் அரசு இன்னும் சற்று அதிகக் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்'' என்று பலரும் கூறினார்கள்.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவது தொடர்பாக, சில கிராமங்களில் புதிய சிக்கல்கள் முளைத்துள்ளன. புறம்போக்கு நிலத்தில் இதுவரை விவசாயம் செய்து வந்து உள்ளோரிடமிருந்து அந்த நிலம் எடுக்கப்பட்டு வேறு நபர்களுக்கு கொடுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்தோரை ஆங்காங்கே சந்திக்க முடிந்தது.

விலை உயர்வு

எகிறிக் கொண்டு செல்லும் விலைவாசியால் பல கிராமங் களில் மக்கள் மூச்சுத் திணற ஆரம் பித்துள்ளதை உணர முடிகிறது.

எனினும், தி.மு.க. தலைமையிலான அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு அனைத்துக் கிராமங்களிலும் கணிசமான வரவேற்பு உள்ளது.

சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்கட்சி ஆகியுள்ள போதிலும் கிராமங்களில் அது இன்னும் வலுவாகவே உள்ளது. சில கிராமங்களில் பிற கட்சிகளை விட அதிக செல்வாக்குடன் விளங்குகிறது.

உள்ளூர் செல்வாக்கு, சாதி, அரசியல் கட்சிகள் என பல காரணிகள் உள்ளாட்சி தேர்தலை தீர்மானிக்கும் நிலை இருப்பதால் அவற்றை ஆய்வு செய்வதற்கான சரியான கருவிகள் இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள சுழற்சி முறையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டைப் பரவலாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பொது தொகுதியில் இருந்து தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதியாக மாற்றியிருப்பதை மக்கள் முழுமையாக ஏற்கவில்லை.

இதனால் மக்களிடம் கசப்புணர்வும், காழ்ப்புணர்வும், சில கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பும் வெளிப்படுகிறது.

மேற்கு மாவட்ட கிராமங்களில் பரவலான ஏற்பு உணர்வும், தெற்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பரவலான கசப்புணர்வும் காணப்படுகின்றன.

அச்ச உணர்வு

அரசின் திட்டத்திற்கு உடன்படாவிட்டால் காவல்துறைநட வடிக்கை எடுக்கும் என்ற அச்சம் காரணமாகவும் பல கிராமங்களில் எதிர்ப்பு உணர்வு வெளிப்படையாகத் தெரியவில்லை.

வலிந்து திணித்தல்

கடந்த 10 ஆண்டுகள் பிரச்சினைக்குரியதாக கருதப்படும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய 3 பஞ்சாயத்துகளில், ``அரசு தங்களுக்குப் பாரபட்சம் காட்டுகிறது. பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு எதிராக தேர்தலை வலிந்து திணிக்கிறது'' என்ற உணர்வு தாழ்த்தப்பட்டோர் அல்லாத மக்களிடம் மேலோங்கியுள்ளது.

நாட்டார் மங்கலத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை சாதியின் முக்கியப் புள்ளிகளுக்கு அரசு அதிகாரிகளும், கட்சியினரும் தந்துள்ள `பொருளாதார உத்திரவாதங்களால்' தற்போது தேர்தல் நடத்துவதற்கு வெளிப்படையான எதிர்ப்பு தென்படவில்லை.

இந்த 3 பஞ்சாயத்துகளையும் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரைப் பொறுத்தவரையில், தற்போது கட்சி ரீதியான ஆதரவு இருந்தாலும், பெரும்பான்மை சமூகத்தைப் பகைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது என்ற அச்ச உணர்வும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி: தினத்தந்தி

Friday, October 06, 2006

திமுக &அதிமுக. மோதல்

மதுரையில் தேர்தல் பதற்றம் தி.மு.க.&அ.தி.மு.க. மோதல்
இரு தரப்பினர் மீதும் வழக்கு


மதுரை, அக்.6: மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் நேற்று கடுமையாக மோதிக் கொண்டனர்.

தி.மு.க. தேர்தல் அலுவலகம் சூறையாடப்பட்டது.

கல்வீச்சில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் கார் சேதமடைந்தது.

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மதுரை தெற்குவாசல் தெற்கு கிருஷ்ணன் கோயில் பகுதியில் தி.மு.க.வினர் நேற்று பிரசாரம் செய்தனர். அப்போது, அ.தி.முக பொறுப்பாளர்கள் முருகன், ராமன் ஆகியோர் அங்கு வந்தனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறி தி.மு.க.வினரிடம் தகராறு செய்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அ.தி.மு.கவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி காயம் அடைந்தார்.

இதுகுறித்து அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப் பாவுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சின்னக்கடைத் தெருவிலுள்ள தி.மு.க தேர் தல் அலுவலகத்துக்கு ராஜன் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் கார்களில் விரைந்து வந்தனர். அங்கி ருந்த தி.மு.க.வினரை தாக்கி னர். இருதரப்பிலும் கல்வீச்சு நடந்தது.

இதில், ராஜன் செல்லப்பா வந்த கார் உட்பட 3 வாகனங்களின் கண்ணாடிகள் நொறுக் கப்பட்டன. இதற்கிடையே, தி.மு.க தேர்தல் அலுவலகத் துக்குள் புகுந்த ஒரு கும்பல் சேர், நாற்காலி, கொடிகள் மற்றும் தோரணங்களை அடித்து நொறுக்கியது. அலுவலகத்தையும் சூறையாடியது.

இந்த மோதலில் தி.மு.க.வை சேர்ந்த மோகன் (40), குமரேசன் (38), லிங்க மூர்த்தி (44), சிவா (34) உட் பட பலர் காயம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பின் னர், விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அ.தி.மு.க.வினர் சென்றனர். ஆனால், தெற்கு வாசல் காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில் மோதல் நடந்ததால் அங்கு செல்லு மாறு போலீசார் தெரிவித்த னர். இதை கண்டித்து அ.தி.மு.க.வினர் பெரியார் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பின்னர், மதுரை மாநகர காவல்துறை ஆணை யரின் அலுவலகத்தை முற்று கையிட்டனர். உதவி கமிஷ னர் அறிவுச் செல்வத்திடம் ராஜன் செல்லப்பா புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து கமிஷனர் சிதம்பரசாமி கூறுகையில்,
"அமைச்சர்கள் பூங்கோதை, பெரியகருப்பன் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் பணம் பட்டுவாடா செய்த தாக ராஜன் செல்லப்பா புகார் கூறியுள்ளார். ஆனால், அமைச்சர்கள் இருவரும் முதல்வர் கருணாநிதியை வரவேற்க நெல்லை சென்றுள்ளனர். தவறான புகார் தரப்பட்டிருக்கிறது. மேலும், தேர்தல் விதிகளுக்கு முரணாக ஊர்வலமாக சென்று மறியல் நடத்தியதற் காக அ.தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்றார்.

அ.தி.மு.கவினர் கொடுத்த புகாரின் பேரில் சூடம் மணி, கோபி, பாண்டி, முபாரக் மந்திரி உட்பட 50பேர் மீது தெற்குவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல், தி.மு.க 36வது வார்டு கவுன்சிலர் ராமர் (45) கொடுத்த புகாரின்பேரில் ராஜன் செல்லப்பா, அவரது மகன் சத்தியன், ஆறுமுகம், பரமன், பாஸ்கர், மாரியப்பன், துரைப்பாண்டி, தட்சிணாமூர்த்தி, கொத்தளன், சுப்பு, பூபாலன் ஆகிய 11 பேர் மீது போலீசார் கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ராஜன் செல்லப்பா கூறுகையில், "மதுரை மத்திய தொகுதியில் அதிமுக வெற்றி பெறும். மதுரை மத்திய தொகுதி தேர்தல் பார்வையாளர் ஒருநாள் மட்டுமே தொகுதிக்கு வந்தார்.கொடிகளை அவிழ்க்க சொன்னார். அதன் பின்னர் அவரை காணவில்லை" என்றார்.

செய்தி : தினகரன்

Tuesday, October 03, 2006

போட்டியின்றி தேர்வு

*
தமிழகத்தில் சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை மொத்தம் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவிகளுக்கு அக்டோபர் 13, 15-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக 4 லட்சத்து 79 ஆயிரத்து 335 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இம் மனுக்கள் மீதான பரிசீலனையில் 9 ஆயிரத்து 780 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

77 ஆயிரத்து 973 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதையடுத்து 18 ஆயிரத்து 481 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நடக்க இருக்கும் தேர்தலில் இறுதியாக 3 லட்சத்து 91 ஆயிரத்து 582 பேர் களத்தில் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில்... 473 மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 491 வேட்பாளர்களும், 3 ஆயிரத்து 364 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 17 ஆயிரத்து 486 வேட்பாளர்களும், 964 மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 5,358 வேட்பாளர்களும், 8 ஆயிரத்து 406 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 36 ஆயிரத்து 94 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஊரக உள்ளாட்சிகளில்... 653 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 ஆயிரத்து 222 வேட்பாளர்களும், 6 ஆயிரத்து 502 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 25 ஆயிரத்து 725 வேட்பாளர்களும், 11 ஆயிரத்து 990 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 48 ஆயிரத்து 422 வேட்பாளர்களும், 80 ஆயிரத்து 129 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 லட்சத்து 52 ஆயிரத்து 783 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஒரு வேட்பாளர் இறந்ததால் செங்கோட்டை நகராட்சியின் 23-வது வார்டில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுவதாக இருந்த வாக்குப்பதிவு 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள்-28 பேர், மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 23 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள்-401 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்-68 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-3 பேர், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள்- 628 பேர், கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள்-17,329 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைதலைவர், மேயர், துணைமேயர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் உள்ளாட்சித்தேர்தலுக்குப் பின் வரும் 28ம் தேதி நடத்தப்படுகிறது.

Sunday, October 01, 2006

விஜயகாந்துக்கு தீபம்

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. சின்னங்கள் ஒதுக்கும் பணியும் நிறைவடைந்தது.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 159 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 374 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 லட்சத்து 76 ஆயிரத்து 620 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மிக அதிகபட்ச எண்ணிக்கை சுயேட்சை வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிகிறது. இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் முரசு சின்னம் இல்லாததால் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு பெரும்பாலான இடங்களில் அக்கட்சி தேர்வு செய்த தீபம் சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது. மதுரை இடைத்தேர்தலில் இக்கட்சி முரசு சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முடிவுகளாக நகராட்சித் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு நான்கு இடங்கள் போட்டியின்றி கிடைத்துள்ளன. கடையநல்லூர் நாகராட்சி வார்டு உறுப்பினர்களாக இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்களும் இரண்டு திமுக உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.

Saturday, September 30, 2006

வேட்புமனு தள்ளுபடி

உள்ளாட்சித் தேர்தலில் 8 ஆயிரம் மனுக்கள் தள்ளுபடி
இழுபறியில் 72 வேட்புமனு இன்று இறுதிப்பட்டியல் வெளியீடு


சென்னை, செப்.30: உள்ளாட்சி தேர்தலில் 8 ஆயிரத்து 374 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 லட்சத்து 76 ஆயிரத்து 620 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இன்னும் 72 மனுக்கள் ஆய்வில் உள்ளன.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 13, 15 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை நேற்று முன் தினம் முடிந்தது. இது பற்றி மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலில்மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 159 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 8 ஆயிரத்து 374 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 72 வேட்புமனுக்களின் ஆய்வு இன்னும் நிலுவையில் இருக்கிறது. 4 லட்சத்து 76 ஆயிரத்து 620 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்புமனுவுடன் அளிக்கும் பிரமாண வாக்குமூலத்தில் தாக்கல் செய்த விவரங்கள் தவறாக இருந்ததாலும் வேட்பாளரின் இனிஷியல், ஜாதி சான்றுகள், முகவரி போன்றவற்றில் குறைகள், வாக்காளர் பட்டியலில் ஒரு பெயரும், வேட்புமனுவில் இன்னொரு பெயரும் இருப்பது ஆகிய காரணங்களால் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு வாபஸ் நாளை முடிந்ததும், வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

அதன்பின் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி தொடங்கும். அந்தந்த மாவட்டக் கலெக்டர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப் பெட்டிகள், தேர்தல் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செய்தி: தினகரன்.

Friday, September 29, 2006

வேட்பாளர் பட்டியல்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக மொத்தம் 4,79,335 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. வேட்புமனு பரிசீலனையில் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மற்றும் வாபஸ் பெறப்படும் வேட்பு மனுக்கள் நீக்கி முழுமையான வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

Thursday, September 28, 2006

விடுதலைச் சிறுத்தைகள் விலகல்

அ.தி.மு.க. அணியில் இருந்து திடீர் விலகல்:
திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்
கருணாநிதியுடன் சந்திப்பு


சென்னை, செப்.28-

விடுதலை சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலாளர் திருமாவளவன், அ.தி.மு.க. அணியில் இருந்து விலகினார். நேற்று அவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து, தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்.

திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இணைந்து போட்டியிட்டது.

உள்ளாட்சி தேர்தல்

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்று இருந்தது. அந்த கட்சிக்கு 4 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இந்த ஒதுக்கீடு போதாது என்று, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

இந்த நிலையில், அந்த கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவோம் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி, 15-க்கும் அதிகமான நகர, ஒன்றிய பகுதிகளில், ஒதுக்கப்பட்டதை விட கூடுதல் இடங்களில் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வாபஸ் பெற மறுப்பு

அந்த இடங்களில் விடுதலைச்சிறுத்தைகளின் வேட்பாளர்களை வாபஸ் பெறும்படி, அ.தி.மு.க. நிர்வாகிகள் வற்புறுத்தினார்கள். ஆனால், அதற்கு விடுதலை சிறுத்தைகள் மறுத்துவிட்டனர். இதன்காரணமாக கூட்டணியில் `நெருடல்' ஏற்பட்டது.

இதற்கிடையில், நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், கூட்டணியில் சில சிக்கல்கள் இருப்பதாக ஒத்துக்கொண்டார். அதுபற்றி பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும், அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும், பேட்டியின்போது திருமாவளவன் அறிவித்து இருந்தார்.

கருணாநிதியுடன் திடீர் சந்திப்பு

இந்த நிலையில், நேற்று இரவு 7.05 மணிக்கு திருமாவளவன் தி.மு.க. தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்துக்கு `திடீர்' என்று வந்தார். அங்கு, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை அவர் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். பிறகு அவர்கள் இருவரும் பேச்சு நடத்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரு எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ரவிக்குமாரும், இந்த சந்திப்பின்போது திருமாவளவனுடன் இருந்தார்.

திருமாவளவன் பேட்டி

ஏறத்தாழ 45 நிமிட நேர சந்திப்புக்குப்பின் வெளியே வந்த திருமாவளவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அவமதிப்பு

"தேர்தல் அரசியல் களம் எது என்பதை காலம்தான் தீர்மானிக்கிறது. காலத்தின் கட்டளையை ஏற்று இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்தித்தபோதும், உள்ளாட்சி மன்ற தேர்தலின்போதும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்த பேச்சுவார்த்தைகளின்போது, கடுமையான அவமதிப்பு ஏற்பட்டது. உழைப்பை பகிர்ந்து கொள்வது போல் வெற்றியையும் பகிர்ந்து கொள்ளவேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். அ.தி.மு.க.வினர் உழைப்பை சுரண்டுவதைத்தான் நோக்கமாக கொண்டு இருந்தனர். இதை பேச்சுவார்த்தையின்போது உணர முடிந்தது.

உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட அளவில் நடந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க.வினர் எங்களுக்கு குறைவான இடங்களையே கொடுத்தனர். வெற்றிவாய்ப்பு இல்லாத இடங்களை எங்கள் தலையில் கட்ட முயன்றனர். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஏற்றுக் கொள்ளவில்லை.

சந்திக்க முடியவில்லை

எங்களை நட்டாற்றில் விடுவதுபோல் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளினார்கள். ஒன்று, இரண்டு மாவட்டங்களில் இந்த நிலை ஏற்பட்டது. நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்த இடங்களில் அவர்களும் (அ.தி.மு.க) மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வந்தன. கூட்டணி கட்சி என்ற முறையில் அ.தி.மு.க. தலைமையை சந்திக்க முடியவில்லை.

நான் சந்திக்க விரும்புவதாக, அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தும் கூட அவர்கள் தலைமையிடம் தெரிவிக்கவில்லை. அதன்பின் அவர்கள் தொடர்ந்து பேச விரும்பவில்லை என்பதை அறிந்து கொண்டேன். விடுதலைச்சிறுத்தைகளின் நோக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சுயமரியாதைக்காகவும் களப்பணி ஆற்றுவதுதான். சகோதரத்துவம், சமத்துவமும்தான் எங்கள் களப்பணி ஆகும்.

தி.மு.க. வெற்றிக்கு...

சுயமரியாதையை இழந்து, அவமரியாதையை தாங்கிக்கொண்டு அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்ற முடியாது. முதல்-அமைச்சர் கருணாநிதி, எங்களுக்கு உரிய மதிப்பு அளித்து, கூட்டணியில் சேர்த்து இருக்கிறார்.

தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றிக்கு முழுமூச்சுடன் பாடுபடுவோம். கடந்த கால அனுபவங்களை மறந்து, அன்புடன் அரவணைத்து எங்களை வரவேற்ற முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.''

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இடப்பங்கீடு எவ்வளவு?

"தி.மு.க. அணியில் உங்கள் கட்சிக்கு இடப்பங்கீடு எவ்வளவு?'' என்று கேட்டதற்கு, "எங்களை அரவணைத்து உரிய மதிப்பு அளித்து, இடப்பங்கீடும் அளிப்பதாக முதல் அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்'' என்று திருமாவளவன் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

"முன்பு தி.மு.க. அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாங்கள், அந்த அணியை விட்டு விலகும்போது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தீர்கள். இப்போது அ.தி.மு.க. அணியில் வெற்றி பெற்ற உங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்வார்களா?'' என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த திருமாவளவன், "அதுபற்றி நாளை (இன்று) பதில் அளிக்கிறேன், கட்சி அலுவலகத்துக்கு வாருங்கள்''என்று நிருபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தி.மு.க. அணியில்...

கருணாநிதியுடன் நடந்த சந்திப்புக்கு முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாக குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அணியில் சேருவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

படம்,செய்தி: தினத்தந்தி

திருமாவளவன் அணிமாற்றம்

*

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திடீரென அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதிமுக கூட்டணி ஒதுக்கிய இடங்கள் தொடர்பாக சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் அம்மாவுடன் ஒத்துழைப்பு தொடரும் என்று அறிவித்துக் கொண்டிருந்த திருமாவளவன் வேட்புமனு தாக்கல் நேரம் முடிந்த பிறகு அணிமாறி அம்மாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்திருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வைகோ திமுகவுக்குச் செய்ததை இப்போது திருமா அதிமுகவுக்குச் செய்திருக்கிறார். ஆனால் இது குறித்து எந்த சூசகமும் இல்லாமல் காத்து கடைசி நிமிடத்தில் அணிதாவி திருமா தானும் அரசியல் தந்திரி என நிரூபித்திருக்கிறார்.

திமுக அணியில் இம்முறை விடுதலைச் சிறுத்தைகளுக்கு எத்தனை இடம் கிடைக்கும்? அம்மா தந்த நான்கு சதவீதம் கூட திருமாவிற்கேதான். அங்கே இனி அதிமுக அல்லது அதன் கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அந்த இடங்களில் திமுக அணி வேட்பாளர்கள் வாபஸ் வாங்குவார்களா? விடுதலைச்சிறுத்தைகள் வேட்பு மனுதாக்கல் செய்திருக்கும் மற்ற தொகுதிகளிலும் திமுக அணி வேட்பாளர்கள் விட்டுக்கொடுக்க வாய்ப்பு உண்டா? பொறுத்திருந்து பார்போம்.

Wednesday, September 27, 2006

செய்தித் துளிகள்-1

***
முரசு சின்னத்தைப்பெற எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்காததால் தனது கட்சி வேட்பாளர்கள் தீபம் சின்னத்தை தேர்வு செய்யும் படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

***

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சில இடங்களில் அதிமுக உடன்பாட்டை ஏற்க மறுத்து தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். எனினும் அதிமுகவுடனான உடன்பாட்டை ஏற்று அதன்படி செயல்படுமாறு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தன் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

***

பார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து அக்கட்சியின் தலைவர் கார்த்திக் நீக்கப் பட்டுள்ளார்.

***

ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள முதலாவது கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மதுரை மத்திய சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அணிகளும் இடங்களும்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி ஒதுக்கீடுகள்

அதிமுக கூட்டணியில் மதிமுக 17.5 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் 4 சதவீதம் இடங்களில் போட்டியிடுகிறது. சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.

அதிமுக-183, மதிமுக-32, விடுதலைச்சிறுத்தைகள்-10, இந்தியதேசியலீக்-2, ஐஎன்டியூசி-2

அகில இந்திய பார்வர்டு பிளாக்-1, மதச்சார்பற்ற ஜனதா தளம்-1,தமிழ் மாநில முஸ்லிம் லீக்-1, மூவேந்தர் முன்னேற்ற கழகம்-1,

திமுக கூட்டணிக்கான ஒதுக்கீடுகள் விவரம்:

திமுக 50 சதவீதம் காங்கிரஸ் கட்சி 25 சதவீதம், பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் சேர்த்து 25 சதவீதம் இடங்களில் போட்டியிடுகின்றன.

மாநகராட்சி மன்ற மேயர் பதவி மொத்த இடங்கள் 6. தி.மு.க.-4, காங்கிரஸ்-2.

முதல் நிலை நகராட்சித் தலைவர்கள் மொத்த இடங்கள் 102. அதில் தி.மு.க. போட்டியிடும் இடங்கள்-52, காங்கிரஸ்-25, பாட்டாளி மக்கள் கட்சி-12, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-8, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-5.

மூன்றாவது நிலை நகராட்சித் தலைவர்கள் மொத்த இடங்கள்-50. அதில் தி.மு.க. போட்டியிடும் இடங்கள்-23, காங்கிரஸ் கட்சி-13, பாட்டாளி மக்கள் கட்சி-6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-4, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-4.

பேரூராட்சித் தலைவர்கள் மொத்த இடங்கள் 561. அதில் தி.மு.க. போட்டியிடும் இடங்கள்-284, காங்கிரஸ் கட்சி-134 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி-70 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 45 இடங்களிலும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி 28 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மொத்த இடங்கள்-385. அதில் தி.மு.க. போட்டியிடுகின்ற இடங்கள் 185, காங்கிரஸ்-95, பாட்டாளி மக்கள் கட்சி-60, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-25, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-20.

மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மொத்த இடங்கள்-29. அதில் தி.மு.க. போட்டியிடுகின்ற இடங்கள்-12, காங்கிரஸ்-7, பாட்டாளி மக்கள் கட்சி-5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-3, இந்திய கம்யூனிஸ்டு கட்சி-2.

தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு பிரிவு), எம்.ஜி.ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, September 26, 2006

பார்வைகள் பலவிதம்-1

தினத்தந்தி

சென்னை, செப்.26- உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.

பேச்சு வார்த்தை

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 13 மற்றும் 15-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. நாளை (புதன்கிழமை) மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஆனால் அரசியல் கட்சிகள் தொடர்ந்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களிடையே கடந்த 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நேற்று 5-வது நாளாக பேச்சுவார்த்தை நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு

காலை 10.15 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் குழுவினர் அறிவாலயம் வந்தனர். அங்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க .குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பேச்சு வார்த்தை முடிந்து வெளியில் வந்த தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறும் போது, "பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது. தொகுதி பங்கீடு முடிவாகி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. எத்தனை தொகுதிகள் என்பதை கூட்டணி கட்சி தலைவரான முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவிப்பார்'' என்று கூறினார்.

புரட்சி பாரதம்

இதன் பிறகு புரட்சி பாரதம் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்பட்டது.

இது குறித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் எம்.எல்.ஏ. கூறும் போது, "தொகுதி உடன்பாடு சுமூகமாக முடிந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் எங்கள் கட்சிக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நாங்கள் கேட்ட தொகுதிகளை கூட்டணி தலைவர் கருணாநிதி ஒதுக்கி கொடுத்துள்ளார்'' என்று கூறினார்.

பா.ம.க

இதன் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஏ.கே.மூர்த்தி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் அறிவாலயத்துக்கு பகல் 12.15 மணிக்கு வந்தனர். அவர்கள் தி.மு.க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தை முடிந்த வெளியில் வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. இதில் முடிவு ஏற்பட்டு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்து போட்டுள்ளோம். தோழமை கட்சிகளுக்கு எங்கு எல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அந்த இடங்களில் போட்டியிடுவது பற்றி பேசப்பட்டது. தலைவர்கள் பதவி பற்றி மட்டும் பேசி முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பதவி பற்றி எல்லாம் மாவட்ட அளவில் பேசி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

காங்கிரஸ்

இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் 12.30 மணி அளவில் அறிவாலயம் வந்தனர். காங்கிரஸ் பேச்சு வார்த்தை தான் முடிவுக்கு வராமல் இழுபறியில் இருந்தது.

கடந்த 4 நாட்களாக தி.மு.க. குழுவுடன் பேசிவிட்டு நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று அங்கு அகில இந்திய தலைமையிடம் கலந்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் நேற்று காலை தான் சென்னை திரும்பியிருந்தனர்.

30 சதவீதம்

மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. குழுவினர் நேற்று பகல் 12.30 மணி முதல் 2.20 மணி வரை பேச்சு வார்த்தை நடத்தினார்கள். காங்கிரஸ் தரப்பில் தங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தொகுதி பங்கீட்டில் 30 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர்.

ஆனால் தி.மு.க. தரப்பில் 26 சதவீதம் வரை இடங்கள் தான் தர முடியும் என்று கூறினார்கள். இதை காங்கிரசார் ஒத்துக்கொள்வில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பகல் 2.30 மணி அளவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க. குழு மதிய சாப்பாட்டுக்காக புறப்பட்டு சென்று விட்டனர்.

இதனால் காங்கிரஸ் குழுவும் வெளியில் வந்து விட்டனர். அவர்கள் அறிவாலயத்துக்கு வெளியில் வந்து சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்களும் அங்கு இருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் நேற்று மாலை வரை உடன்பாடு எதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறும்போது, "பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது'' என்றார்.

ஒப்பந்தம் கையெழுத்தானது

மீண்டும் இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான தி.மு.க. குழுவுடன் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் கொண்ட காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தத்தில் எம்.கிருஷ்ணசாமி, டி.சுதர்சனம் ஆகியோர் கையெழுத்து போட்டனர். பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்து போட்டுள்ளோம். தொகுதி பங்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. எத்தனை சதவீத தொகுதிகள் என்பதை கூட்டணி கட்சி தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவிப்பார்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.வுடன் சேர்ந்து போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு பற்றி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சையது சத்தார், மாநில மகளிர் அணி செயலாளர் பாத்திமா முத்தாபர் ஆகியோர் கொண்ட குழு தி.மு.க குழுவுடன் நேற்று இரவு 8 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து மாநில பொது செயலாளர் சையது சத்தார் கூறும்போது, ``தொகுதி பங்கீடு எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பதை கூட்டணி தலைவர் கருணாநிதி அறிவிப்பார்'' என்றார்.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு நேற்று இரவு சுமுகமாக முடிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு விவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுகிறது.

25 சதவீத இடங்கள்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சதவீத தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது.

திருச்சி, கோவை ஆகிய மாநகராட்சிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த 2 மாநகராட்சிகளிலும் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.

*

தினமணி

உள்ளாட்சித் தேர்தல்: திமுக கூட்டணியில் உடன்பாடு

சென்னை, செப். 26: உள்ளாட்சித் தேர்தலில் இடப் பகிர்வு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகள் இடையே உடன்பாடு கையெழுத்தானது.

இருப்பினும் யாருக்கு எத்தனை இடம் என்பதை கூட்டணித் தலைவர் முதல்வர் கருணாநிதி சில நாள்களில் அறிவிப்பார் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதோடு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர் பதவிகளில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த ஊர்கள் என்ற விவரம் தேர்தல் முடிந்து அக்டோபர் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதை கூட்டணிக் கட்சிகள் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுவிட்டன என்றும் கூறப்படுகிறது.

அதாவது கவுன்சிலர்கள் தான் மேயர், தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் கவுன்சிலர் தேர்தல் முடிந்த பிறகு எந்தெந்த நகராட்சி எந்தெந்த கட்சிக்கு என்பது அறிவிக்கப்படும் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேயர் பதவி மற்றும்சேர்மன் பதவிகளில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் கவுன்சிலர் இடங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக தொடரவேண்டும் என்பதற்காக மேயர் மற்றும் தலைவர் பதவிகளில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பதை அறிவிப்பது தள்ளிப்போடப்பட்டுள்ளதாகக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்த கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை கணித்து அதன் அடிப்படையில் இடங்கள் பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

*

தினகரன்

சென்னை, செப்.26: தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றுடன் முடிந்ததால், இரண்டு கூட்டணியிலும் இன்று வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக வெளியாக உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 13, 15ம் தேதிகளில் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நாளையுடன் மனுத்தாக்கல் முடிகிறது.

தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பாக இறுதிக் கட்ட பேச்சு நேற்று நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையிலான குழு நேற்று காலை தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி தலைமையிலான குழுவுடன் பேச்சு நடத்தியது. பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. விவரங்களை கூட்டணி தலைவர் முதல்வர் கருணாநிதி அறிவிப்பார்’’ என்று பாண்டியன் கூறினார்.

அதையடுத்து, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தி.மு.க. குழுவுடன் நேற்று ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார். ‘‘வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவது என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டு உறுப்பினர்களுக்கான பதவி இடங்கள் பற்றி மாவட்ட அளவில் பேச்சு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று நிருபர்களிடம் மணி தெரிவித்தார்.

அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டசபை கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் தி.மு.க. குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ‘‘பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. ஓப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டோம். எவ்வளவு தொகுதிகள் என்பதை முதல்வர் அறிவிப்பார்’’ என்று கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உடன்பாடு நேற்று முன்தினமே ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. 17.5 சதவீத இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் 4 சதவீத இடங்களிலும் போட்டியிடும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க.

போட்டியிடும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்களின் 56 பேர் கொண்ட பட்டியலையும் திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 43 பேர் கொண்ட பட்டியலையும் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். மற்ற இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா இன்று வெளியிடுகிறார்.

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடுகின்றன.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். எனவே, இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சியின் வேட்பாளர் பட்டியலும் இன்று முழுமையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*

தினமலர்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கான இடங்கள் ஒதுக்கீடு நேற்று முடிவடைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் கிருஷ்ணசாமியும், சுதர்சனமும் நேற்று கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் காங்கிரசில் ஒரு பிரிவினருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் ஆறு மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளை தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் ஐந்து நாட்களாக நடந்து வருகிறது. பா.ம.க.,வுடன் நேற்று காலை உடன்பாடு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கீடும் முடிவடைந்து விட்டது. காங்கிரஸ் சார்பில் நேற்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் நேற்று மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும், சுதர்சனமும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது.

வெளியில் வந்த கிருஷ்ணசாமி நிருபர்களிடம் தெரிவிக்கையில், ""தி.மு.க.,வுடனான உள்ளாட்சித் தேர்தல் இட பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக முடிந்தது. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டோம். காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்ற விவரங்களை முதல்வர் கருணாநிதி அறிவிப்பார்,'' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மற்ற கட்சிகளுடன் தி.மு.க., குழு நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சதவீத இடங்கள் தர தி.மு.க., ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரசுக்கு கிடைக்கும் இடங்களில் 60 சதவீதத்தை தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வாசன் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. தற்போது நடந்துள்ள ஒப்பந்தத்தில் வாசன் தரப்புக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிவாலயத்தில் ஒப்பந்தம் முடிந்ததும் வாசன் தலைமையிலான தலைவர்கள் சென்னையில் உள்ள பாம்குரூவ் ஓட்டலுக்கு விரைந்தனர். அங்கு தங்கியுள்ள காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சாந்தாராம் நாயக்கை சந்தித்து புகார் தெரிவித்தனர். மற்ற கோஷ்டியினரும் மேலிட பார்வையாளரைச் சந்தித்து புகார் தெரிவித்தனர். இந்த கோஷ்டிப் பூசல் நேற்று இரவு முழுவதும் நீடித்தது.

இதுதவிர மாவட்ட அளவில் தி.மு.க., குழுவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் காங்கிரசுக்கு பல இடங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மாவட்டங்களில் கவுன்சிலர் பதவிகளில் பெரும்பான்மை இடங்களில் தி.மு.க.,வே போட்டியிட விரும்புவதால் அங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தி கிளம்பி வருகிறது. இந்த புகார்கள் தங்கள் கட்சிகளின் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் மூலம் தீர்த்து வைக்கும் நிலை நீடித்து வருகிறது.
*

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com