Thursday, October 19, 2006

தேர்தல் முடிவுகள் செய்தி

உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டு மொத்தமாக அள்ளியது தி.மு.க., * கூட்டணி பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுருண்டது அ.தி.மு.க., * கணிசமாக கணக்கை துவக்கியது தே.மு.தி.க.,

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., கூட்டணி பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அ.தி.மு.க., சுருண்டுள்ளது. தே.மு.தி.க.,வும் பல இடங்களில் கணக்கை தொடங்கியுள்ளது. பெரும்பாலான நகராட்சிகளில் சுயேச்சைகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இதில் 18 ஆயிரம் பதவிகளுக்கு போட்டியின்றி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சியுள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 487 பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 700 மையங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதால் மற்ற ஐந்து மாநகராட்சி பகுதிகளிலும் நேற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. இந்த ஐந்து மாநகராட்சிகளையும் தி.மு.க., கூட்டணியே கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி பலத்தால் பேரூராட்சி, நகராட்சி, 3ம் நிலை நகராட்சி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் தி.மு.க., கூட்டணி ஒட்டுமொத்தமாக அள்ளியுள்ளது. கூட்டணி பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30 சதவீதத்திற்கும் குறைவான இடங்களையே அ.தி.மு.க., கைப்பற்ற முடிந்துள்ளது.

முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் தே.மு.தி.க., பெரும்பாலான இடங்களில் கணக்கைத் துவங்கி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மதுரை உள்ளிட்ட ஒருசில இடங்களில் அ.தி.மு.க.,வைவிட கூடுதல் இடங்களைப் பிடித்து பிரதான எதிர்க்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., கூட்டணி கட்சிகளும் தாங்கள் போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலும் வெற்றிபெற்று கூட்டணி சார்பில் தலைவர் பதவிகளை கைப்பற்ற வழிவகுத்துள்ளன.

மாநகராட்சிகளின் தேர்தல் முடிவுகள்: * நெல்லை மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 55 ; முடிவு தெரிந்தவை: 55 ; தி.மு.க., கூட்டணி: 34 ; அ.தி.மு.க., கூட்டணி: 13 ; பா.ஜ. க. 1 ; சுயேச்சைகள்: 7 * மதுரை மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 72; முடிவு தெரிந்தவை: 65 ; தி.மு.க., கூட்டணி: 43 ; அ.தி.மு.க., கூட்டணி: 9 ; தே.மு.தி.க.,: 9 ; சுயேச்சைகள்: 4 * திருச்சி மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 60; முடிவு தெரிந்தவை: 56 ; தி.மு.க., கூட்டணி: 36; அ.தி.மு.க., கூட்டணி: 13; தே.மு.தி.க.,: 1; சுயேச்சைகள்: 6 ; 4 வார்டுகளில் தி.மு.க.முன்னணி வகிக்கிறது * கோவை மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 72; முடிவு தெரிந்தவை: 44 ; தி.மு.க., கூட்டணி: 30 ; அ.தி.மு.க., கூட்டணி: 5 ; தே.மு.தி.க 2 ; பா.ஜ.க. 1 ; சுயேச்சைகள்: 6 * சேலம் மாநகராட்சி: மொத்த வார்டுகள்: 60; முடிவு தெரிந்தவை: 31; தி.மு.க., கூட்டணி: 20 ; அ.தி.மு.க 8 ; தே.மு.தி.க.,: 2 ; சுயேச்சைகள்: 1 ; 29 வார்டுகளில் தி.மு.க.முன்னணி.

இதுதவிர பேரூராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தி.மு.க., கூட்டணியே பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வருகின்றன. வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் அனைத்து உள்ளாட்சி உறுப்பினர் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியில் தெரியவரும் என்று மாநில தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தி.மு.க., கூட்டணிக்கு 1065நகராட்சி கவுன்சிலர் பதவிகள்: நகராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளில் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க., கூட்டணி பெற்றுள்ளது. மொத்த நகராட்சிகள் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி கவுன்சிலர் பதவிகள்: 4379; முடிவு அறிவிக்கப்பட்டவை: 2133; திமுக கூட்டணி: 1065; அ.தி.மு.க., கூட்டணி: 551; தே.மு.தி.க.,: 60; சுயே., : 430; பா.ஜ.,: 18; இதர கட்சிகள்: 9 தி.மு.க., கூட்டணிக்கு 1916 பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள்: மொத்த பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள்: 8807; முடிவு அறிவிக்கப்பட்டவை: 4470; தி.மு.க., கூட்டணி: 1916; அ.தி.மு.க., கூட்டணி: 926; தே.மு.தி.க.,: 94; பா.ஜ.,: 49; சுயே.,: 1463; இதர கட்சிகள்: 22

செய்தி: தினமலர்

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com