திமுக ஏமாற்றியது?
ஒதுக்கப்பட்ட இடங்களில் பா.ம.க.- காங்கிரஸ், கம்யூனிஸ்டு தோல்வி: தி.மு.க. மீது குற்றச்சாட்டு
சென்னை, அக். 29-
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 6 மாநகராட்சிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. நகராட்சி, பேரூராட்சி, பஞ் சாயத்து ïனியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. திடீரென்று போட் டியிட்டு வெற்றி பெற்றது. இதனால் கம்யூனிஸ்டு, பா.ம.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு ஒதுக்கிய ஆற்காடு நகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. சிதம்பரம் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. கூட்டணி இடபங்கீடு பட்டிய லில் பா.ம.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகள் பெயரும் இடம் பெற்று இருந்தது. இருகட்சி சார்பி லும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பவுசியாபேகம் வெற்றி பெற்றார்.
திட்டக்குடி பேரூராட்சி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 3 ஓட்டுகளே பெற்று பா.ம.க. வேட்பாளர் வசந்தா தோல்வி அடைந்தார். தி.மு.க. ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் மன்னன் 13 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நல்லூர் ஒன்றியத்தில் அக்கட்சி சார்பில் யாரும் போட்டியிடாததால் தி.மு.க. வேட்பாளர் ஜெயசித்ரா வெற்றி பெற்றார்.
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாடுதுறை நகரசபையில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் லிங்குராஜ் 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் 13 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
சீர்காழி நகரசபையில் தி.மு.க.வும், பா.ம.க.வும் மோதிக் கொண்டது. இதில் தி.மு.க.வை சேர்ந்த சாந்தினி 18 ஓட்டுகள் பெற்று தலைவர் ஆனார். பா.ம.க.வை சேர்ந்த சுபா 6 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
செம்பனார் கோவில் ïனியன் தலைவர் தேர்தலில் தி.மு.க., பா.ம.க. இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ம.க. தோல்வி அடைந் தது.
ஈரோடு காசிபாளையம் 3-ம் நிலை நகராட்சி தலை வர் பதவி தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட் சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தி.மு.க. சார்பில் சுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈரோடு பெரிய அக்ரகாரம் பேரூராட்சியில் தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இவரது வேட்பு மனுவை வழிமொழிய யாரும் முன் வராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜாபர் சாதிக் 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவி உழவர் உழைப்பாளர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க. முயற்சி செய்ததால் உழவர் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த செல்லமுத்து வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை. தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ் தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தலைராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. தலைவர் பதவி வேட்பாளராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ம.க. பிரமுகர் காமராஜ் அறிவிக்கப்பட்டார்.
அவர் மனுதாக்கல் செய்ய வரும்போது தி.மு.க. வேட்பாளராக ஆதிமகேந் திரன் மனுதாக்கல் செய்த விவரம் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் `திடீரென்று' மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார்.
தலைவர் பதவிக்கு நிறுத் தப்பட்ட தி.மு.க. வேட்பாளர் ஆதிமகேந்திரன் வெற்றி பெற்றார். இதை கண்டித்து பா.ம.க.வினர் மேகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர் நகராட்சி தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. பா.ம.க.வைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் எஸ்.ஏ.சத்யா போட்டியிட்டார். இதில் எஸ்.ஏ.சத்யா வெற்றி பெற்றார்.
இந்த நகராட்சியில் மொத் தம் 30 கவுன்சிலர்கள் உள்ள னர். இதில் தி.மு.க.வுக்கு 10 கவுன்சிலர்களும், காங்கிர சுக்கு 4 கவுன்சிலர்களும், பா.ம.க.வுக்கு 2 கவுன்சிலர் களும் உள்ளனர். அ.தி.மு.க. வுக்கு 7 பேரும், விஜயகாந்த் கட்சிக்கு ஒரு கவுன்சிலரும், 6 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.
தி.மு.க. கூட்டணிக்கு 16 கவுன்சிலர்கள் ஆதரவு இருந்ததால் பா.ம.க. வேட் பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணியில் இருந்து 6 பேர் கட்சி மாறி ஓட்டு போட்டு உள்ளனர். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களில் 6 பேர் கட்சி மாறி ஓட்டு போட்டதால் எஸ்.ஏ.சத்யா 16 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெண்ணந் தூர், மல்லசமுத்திரம், மோக னூர் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களும், ஆலாம்பாளை யம், வெண்ணந்தூர், சேந்த மங்கலம், அத்தனூர் ஆகிய 4 பேரூராட்சிகளும் ஒதுக்கப் பட்டு இருந்தன.
இதில் மல்லசமுத்திரம், மோகனூரில் தி.மு.க. வேட் பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 4 பேரூராட்சி தலைவர் இடங்களில் தி.மு.க-2, சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
குழித்துறை நகரசபை கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட் டது. ஆனால் தி.மு.க. வேட்பா ளர் ஆசைதம்பி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நாகர்கோவில் நகரசபை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளராக மேரிஜோஸ்பின் அம்மாள் அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரை எதிர்த்து காங்கிரஸ்ë போட்டி வேட்பாளராக அசோக்சாலமன் போட்டி யிட்டு வெற்றிபெற்றார்.
ரீத்தாபுரம் பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு பா.ஜனதா, கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
கணபதிபுரம் பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கும் தே.மு.தி.க. பா.ஜனதா உதவியுடன் தி.மு.க. கைப்பற்றி உள்ளது. திங்கள்சந்தை பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தி.மு.க. ஆதரவுடன் பா.ஜனதா வெற்றி பெற்றது.
பாகோடு பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்டு கட்சியினர் தலைவர் பதவியை பிடித்துள்ளனர்.
கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட கடையாலு பேரூராட்சியில் காங்கிரசும் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப் பட்ட திற்பரப்பு பேரூராட் சியை பா.ஜனதாவும் கைப்பற்றியது. ஏழுதேசம் பேரூராட்சி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பா.ஜனதா உதவியுடன் காங்கிரஸ் பேரூராட்சியை பிடித்துள்ளது.
குருந்தன்கோடு யூனியன் தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கவுன்சிலர், அ.தி. மு.க.வுக்கு ஆதரவு அளித் துள்ளதை அடுத்து அ.தி.மு.க. போட்டியின்றி தேர்ந்தெ டுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் சுயேட்சைகள் ஆதரவுடன் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
முதுகுளத்தூர் யூனியன் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தி.மு.க.- காங்கிரஸ் கட்சி இடையே தகராறு ஏற்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் சேத்தூர் பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. இங்கு அ.தி.மு.க. ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பதவியை தன் வசப்படுத்தி உள்ளது. துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு ஆதரவுடன் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.
ராஜபாளையம் நகரசபை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு காங்கிரஸ் வேட்பாளர் ரத்தினம்மாள் நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மானாமதுரை பேரூராட்சி தலைவர் பதவி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. மொத்தம் உள்ள 18 வார்டு களில் ஒரு இடத்தில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை. இதனால் தி.மு.க. சார்பில் ராஜாமணி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டம் அவனியா புரம் நகரசபை பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்தையா வெற்றி பெற்றார். தி.மு.க.வினர் ஆதரவு இல்லாத தால் பா.ம.க. சார்பில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்ட இளஞ்செழியன் மனுதாக்கல் செய்ய வில்லை.
மேலூர் ஊராட்சி ஒன்றி யம் காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டு இருந்தது. இங்கு காங் கிரசை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அழகு பாண்டி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. கூட்டணியில் கட்சி மாறி ஓட்டுப் போட்டதால் பா.ம.க.வுக்கு நகரசபை மற்றும் பேரூராட்சி, யூனியன் தலைவர் பதவிகளில் 40 இடங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சி மாறி ஓட்டுப் போட்ட தால் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து ஓசூர் நகரசபை ஆகியவற்றை அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த கட்சி சார்பில் கவுன்சிலர் சிவகாமி சுந்தரி தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டார்.
நேற்று காலை 9.30 மணிக்கு சிவகாமி சுந்தரி வேட்புமனு தாக்கல் செய்ய தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் முன்மொழி யவும், வழி மொழியவும் கேட்டார். அதற்கு அவர்கள் யாருமே முன்வரவில்லை. மாறாக தி.மு.க.வை சேர்ந்த எம்.ஜி.பெல்லும், காங்கிரசை சேர்ந்த மோகன்குமார ராஜாவும் தனித்தனியே தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தனர்.
இதை பார்த்த இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சிவகாமி சுந்தரி தேர்தலை புறக்கணித்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த எம்.ஜி.பெல் 16 ஒட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
நாங்குநேரி பேரூராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த சங்கரன் வெற்றி பெற்றார். பண்மொழி பேரூராட்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது.
மானூர் ஒன்றிய சேர்மன் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப் பட்டது இதில் காங்கிரஸ் எந்த வார்டிலும் வெற்றி பெறாததால் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது. சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பா.ம.க. வேட்பாளருக்கு எதிராக தி.மு.க. உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பா.ம.க.வுக்கு என்று ஒதுக்கப் பட்ட ஒரு பேரூராட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் ராதாபுரம் ஒன்றியமும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றது.
தி.மு.க.-காங்கிரசால் பா.ம.க. தோற்கடிக்கப்பட்ட தற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திருவண்ணாமலை, வேலூர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் அப்பாவு, உதயம் சண்முகம், கே.பி.ராமசாமி ஆகிய 3 பேரிடம் தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் விளக்கம் கேட்டு இருக்கிறார்.
செய்தி: மாலைமலர்
1 comment:
hi good diffrent ane blog saithu vachirugingaa..... nice!
this is my blog plz visit
www.kavimozhiz.blogspot.com
Post a Comment