மேயர் வேட்பாளர்கள்
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தலில் வென்ற உறுப்பினர்கள்,ஊராட்சித் தலைவர்கள் இன்று பதவி ஏற்றனர்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் வென்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 155 கவுன்சிலர்களில் 153 பேர் மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 4 உறுப்பினர்களில் சுந்தரமூர்த்தி (61-வது வார்டு), எம்.கிருஷ்ணன் (71-வது வார்டு) ஆகியோர் ஜெயலலிதா உத்தரவுக்கேற்ப பதவியை ராஜினாமா செய்து விட்டதால் அவர்கள் இருவரும் மட்டும் இன்று பதவி ஏற்கவில்லை. 1-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி, 26-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். ராஜினாமா செய்ய மறுத்ததால் இவர்கள் இருவரையும் ஜெயலலிதா நேற்று கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.
40-வது வார்டில் வெற்றி பெற்ற ஒரே ஒரு ம.தி.மு.க. கவுன்சிலர் கன்னியப்பன் வைகோ உத்தரவுப்படி ராஜினாமா செய்ய மறுத்து இன்று பதவியேற்றார். இதனால் இவரை இன்று வைகோ மதிமுகவை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் மாநகராட்சி மேயர், துணைமேயர் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
சென்னை
மேயர்-மா.சுப்பிரமணியம்
துணை மேயர்-ஆர்.சத்தியபாமா
மதுரை
மேயர்-தேன்மொழி கோபிநாதன்
துணை மேயர்
பி.எம்.மன்னன்
நெல்லை
மேயர்-ஏ.எல். சுப்பிரமணியம்
துணை மேயர்-கா.முத்துராமலிங்கம்
சேலம்
மேயர்-ரேகா பிரியதர்ஷினி
துணை மேயர்-பி.பன்னீர் செல்வம்
கோவை
துணை மேயர்-ந.கார்த்திக்
திருச்சி
துணை மேயர்-மு.அன்பழகன்
கோவை, திருச்சிக்கு திமுக மேயர் வேட்பாளர்களை அறிவிக்காததால் இங்கு காங்கிரஸ் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
மேயர், துணைமேயர் தேர்தல் அக்டோபர் 28 சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினமே நகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி தலைமைப் பொறுப்புகளுக்கான தேர்தலும் நடைபெறும்.
No comments:
Post a Comment