போட்டியின்றி தேர்வு
மதுரை, சேலம், நெல்லை, ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களாக முறையே திமுகவைச் சேர்ந்த தேன்மொழி கோபிநாத், ரேகா பிரியதர்ஷினி, ஏ.எல்.சுப்ரமணியம், கோவையில் காங்கிரஸ் சார்பில் காலனி வெங்கடாச்சாலம் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து அதிமுக சார்பில் மரியம்பிச்சை என்ற கவுன்சிலர் போட்டியிட்டார். மொத்தம் 60 வாக்குகளில் 42 வாக்குகள் பெற்று சாருபாலா தொண்டைமான் மேயராக தேர்வு பெற்றார்.
மொத்தம் உள்ள 152 நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலானவற்றை திமுக கூட்டணியினரே கைப்பற்றினர்.
திண்டுக்கல், ஆத்தூர், ஈரோடு, கரூர், சத்தியமங்கலம், அறந்தாங்கி, மேலூர், திருத்துறைப்பூண்டி, பத்மநாபபுரம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
சிவகாசி, திருமங்கலம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. திண்டிவனம், தாராபுரம் ஆகிய தலைவர் பதவி தேர்தலில் பாமக வெற்றி பெற்றது.
ஓசூர், நாமக்கல், குடியாத்தம் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை அதிமுக வென்றது. குழித்துறை, குளச்சல் ஆகிய நகராட்சித் தலைவர் பதவிகளை எந்தக் கட்சியையும் சேராத சுயேச்சைகள் வென்றனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பவானி, புளியங்குடி, பரமக்குடி, பூந்தமல்லி நகராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
குளித்தலை நகராட்சித் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை எதிர்த்து திமுக கவுன்சிலர் போட்டியிட்டு தலைவர் பதவியைக் கைப்பற்றி விட்டார். குழித்துறை நகராட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு காங்கிரஸ் பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மொத்தம் உள்ள 152 நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக கூட்டணி 127 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் திமுக 95 தலைவர் பதவிகளையும், காங்கிரஸ் 20 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், விடுதலைச் சிறுத்தைகள் நெல்லிக்குப்பம் நகராட்சியிலும் வெற்றி பெற்றனர்.
அதிமுகவுக்கு 16 நகராட்சித் தலைவர் பதவிகள் கிடைத்துள்ளன. கூட்டணிக் கட்சியான மதிமுகவுக்கு ஒரு நகராட்சியும் கிடைக்கவில்லை. சுயேச்சைகள் 7 நகராட்சித் தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.
மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவிகளில் திமுக-15, காங்கிரஸ்-5, பாமக-4, இந்திய கம்யூ-1, மார்க் கம்யூ-1, அதிமுக-1 வெற்றி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment