Sunday, October 01, 2006

விஜயகாந்துக்கு தீபம்

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. சின்னங்கள் ஒதுக்கும் பணியும் நிறைவடைந்தது.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 159 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 374 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 லட்சத்து 76 ஆயிரத்து 620 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மிக அதிகபட்ச எண்ணிக்கை சுயேட்சை வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிகிறது. இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் முரசு சின்னம் இல்லாததால் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு பெரும்பாலான இடங்களில் அக்கட்சி தேர்வு செய்த தீபம் சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது. மதுரை இடைத்தேர்தலில் இக்கட்சி முரசு சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முடிவுகளாக நகராட்சித் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு நான்கு இடங்கள் போட்டியின்றி கிடைத்துள்ளன. கடையநல்லூர் நாகராட்சி வார்டு உறுப்பினர்களாக இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்களும் இரண்டு திமுக உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com