Saturday, September 30, 2006

வேட்புமனு தள்ளுபடி

உள்ளாட்சித் தேர்தலில் 8 ஆயிரம் மனுக்கள் தள்ளுபடி
இழுபறியில் 72 வேட்புமனு இன்று இறுதிப்பட்டியல் வெளியீடு


சென்னை, செப்.30: உள்ளாட்சி தேர்தலில் 8 ஆயிரத்து 374 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 லட்சத்து 76 ஆயிரத்து 620 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இன்னும் 72 மனுக்கள் ஆய்வில் உள்ளன.

தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 13, 15 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை நேற்று முன் தினம் முடிந்தது. இது பற்றி மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலில்மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 159 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 8 ஆயிரத்து 374 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 72 வேட்புமனுக்களின் ஆய்வு இன்னும் நிலுவையில் இருக்கிறது. 4 லட்சத்து 76 ஆயிரத்து 620 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்புமனுவுடன் அளிக்கும் பிரமாண வாக்குமூலத்தில் தாக்கல் செய்த விவரங்கள் தவறாக இருந்ததாலும் வேட்பாளரின் இனிஷியல், ஜாதி சான்றுகள், முகவரி போன்றவற்றில் குறைகள், வாக்காளர் பட்டியலில் ஒரு பெயரும், வேட்புமனுவில் இன்னொரு பெயரும் இருப்பது ஆகிய காரணங்களால் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வேட்புமனு வாபஸ் நாளை முடிந்ததும், வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

அதன்பின் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி தொடங்கும். அந்தந்த மாவட்டக் கலெக்டர்கள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அனைத்து மாவட்டங்களிலும் வாக்குப் பெட்டிகள், தேர்தல் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செய்தி: தினகரன்.

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com