நாளை பதவியேற்பு
சென்னை மாநகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் நாளை பதவி ஏற்பு: 29-ந்தேதி மேயர் தேர்தல்
சென்னை, அக்.24-
சென்னை மாநகராட் சிக்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 155 வார்டுகளில் 149-ல் வெற்றி பெற்றது.தி.மு.க. தனித்து பொறுப்பேற்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் பெற் றுள்ளது.
சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார்கள். இதற்கான விழா மாநகராட்சி 2-வது மாடியில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெறுகிறது.
புதிய கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் எம்.பி. விஜயகுமார் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
நாளை மேயர், துணை மேயர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 28-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் 29-ந்தேதி தேர்வு செய்யப்படுவார். இவர் களுக்கு மாநகராட்சி கமிஷனர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
கவுன்சிலர்களாக பதவி ஏற்பவர்கள் மட்டுமே மேயர், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும். எனவே சென்னை மாநகராட்சி வார்டு களில் தேர்வானவர்கள் நாளை தவறாமல் பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
சென்னை மாநகராட்சி மேயர் 29-ந்தேதி தேர்வானதும் அவரிடம் மேயருக்கான கவுன், ரோப் மற்றும் ஆபரணங்கள் ஒப்படைக்கப்படும். இதை யடுத்து அவர் தன் அறைக்கு சென்று பணிகளை தொடங்கு வார்.
அதன் பிறகு சென்னை மாநகராட்சி முதல் கூட்டத்துக் கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும். அது போல இதர உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர் பதவி ஏற்பவர்கள் முறைப்படி முதல் கூட்டத்துக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்புகளை வெளி யிடுவார்கள்.
தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று இருப்பதால் தி.மு.க. கவுன்சிலர்களில் ஒருவர் மேயராக நிறுத்தப்படுகிறார். மா.சுப்பிரமணியன், தன சேகரன், சுரேஷ்குமார் ஆகி யோரில் ஒருவர் மேயர் பதவிக்கு அறிவிக்கப்பட லாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டி பஇருக்க வாய்ப்பு இல்லை.எனவே அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்.
சென்னை மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்டு இதுவரை 45 மேயர்கள் பதவியில் இருந் துள்ளனர். 29-ந் தேதி பதவி ஏற்பவர் 46-வது மேயர் ஆவார்.
நாளை நடக்கும் உறுப்பினர் பதவி ஏற்பு விழா மற்றும் 29-ந் தேதி நடக்கும் மேயர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகர்களுக்கு விசேஷ அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
செய்தி: மாலைமலர்.
No comments:
Post a Comment