Tuesday, October 03, 2006

போட்டியின்றி தேர்வு

*
தமிழகத்தில் சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை மொத்தம் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவிகளுக்கு அக்டோபர் 13, 15-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்காக 4 லட்சத்து 79 ஆயிரத்து 335 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இம் மனுக்கள் மீதான பரிசீலனையில் 9 ஆயிரத்து 780 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

77 ஆயிரத்து 973 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதையடுத்து 18 ஆயிரத்து 481 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நடக்க இருக்கும் தேர்தலில் இறுதியாக 3 லட்சத்து 91 ஆயிரத்து 582 பேர் களத்தில் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில்... 473 மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 491 வேட்பாளர்களும், 3 ஆயிரத்து 364 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 17 ஆயிரத்து 486 வேட்பாளர்களும், 964 மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 5,358 வேட்பாளர்களும், 8 ஆயிரத்து 406 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 36 ஆயிரத்து 94 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஊரக உள்ளாட்சிகளில்... 653 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 ஆயிரத்து 222 வேட்பாளர்களும், 6 ஆயிரத்து 502 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 25 ஆயிரத்து 725 வேட்பாளர்களும், 11 ஆயிரத்து 990 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 48 ஆயிரத்து 422 வேட்பாளர்களும், 80 ஆயிரத்து 129 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 லட்சத்து 52 ஆயிரத்து 783 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஒரு வேட்பாளர் இறந்ததால் செங்கோட்டை நகராட்சியின் 23-வது வார்டில் அக்டோபர் 15-ம் தேதி நடைபெறுவதாக இருந்த வாக்குப்பதிவு 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள்-28 பேர், மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 23 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள்-401 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்-68 பேர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-3 பேர், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள்- 628 பேர், கிராமப் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள்-17,329 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைதலைவர், மேயர், துணைமேயர் ஆகியோரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் உள்ளாட்சித்தேர்தலுக்குப் பின் வரும் 28ம் தேதி நடத்தப்படுகிறது.

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com