Friday, October 06, 2006

திமுக &அதிமுக. மோதல்

மதுரையில் தேர்தல் பதற்றம் தி.மு.க.&அ.தி.மு.க. மோதல்
இரு தரப்பினர் மீதும் வழக்கு


மதுரை, அக்.6: மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் நேற்று கடுமையாக மோதிக் கொண்டனர்.

தி.மு.க. தேர்தல் அலுவலகம் சூறையாடப்பட்டது.

கல்வீச்சில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் கார் சேதமடைந்தது.

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மதுரை தெற்குவாசல் தெற்கு கிருஷ்ணன் கோயில் பகுதியில் தி.மு.க.வினர் நேற்று பிரசாரம் செய்தனர். அப்போது, அ.தி.முக பொறுப்பாளர்கள் முருகன், ராமன் ஆகியோர் அங்கு வந்தனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறி தி.மு.க.வினரிடம் தகராறு செய்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அ.தி.மு.கவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி காயம் அடைந்தார்.

இதுகுறித்து அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப் பாவுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சின்னக்கடைத் தெருவிலுள்ள தி.மு.க தேர் தல் அலுவலகத்துக்கு ராஜன் செல்லப்பா மற்றும் கட்சி நிர்வாகிகள் கார்களில் விரைந்து வந்தனர். அங்கி ருந்த தி.மு.க.வினரை தாக்கி னர். இருதரப்பிலும் கல்வீச்சு நடந்தது.

இதில், ராஜன் செல்லப்பா வந்த கார் உட்பட 3 வாகனங்களின் கண்ணாடிகள் நொறுக் கப்பட்டன. இதற்கிடையே, தி.மு.க தேர்தல் அலுவலகத் துக்குள் புகுந்த ஒரு கும்பல் சேர், நாற்காலி, கொடிகள் மற்றும் தோரணங்களை அடித்து நொறுக்கியது. அலுவலகத்தையும் சூறையாடியது.

இந்த மோதலில் தி.மு.க.வை சேர்ந்த மோகன் (40), குமரேசன் (38), லிங்க மூர்த்தி (44), சிவா (34) உட் பட பலர் காயம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பின் னர், விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அ.தி.மு.க.வினர் சென்றனர். ஆனால், தெற்கு வாசல் காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில் மோதல் நடந்ததால் அங்கு செல்லு மாறு போலீசார் தெரிவித்த னர். இதை கண்டித்து அ.தி.மு.க.வினர் பெரியார் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பின்னர், மதுரை மாநகர காவல்துறை ஆணை யரின் அலுவலகத்தை முற்று கையிட்டனர். உதவி கமிஷ னர் அறிவுச் செல்வத்திடம் ராஜன் செல்லப்பா புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து கமிஷனர் சிதம்பரசாமி கூறுகையில்,
"அமைச்சர்கள் பூங்கோதை, பெரியகருப்பன் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் பணம் பட்டுவாடா செய்த தாக ராஜன் செல்லப்பா புகார் கூறியுள்ளார். ஆனால், அமைச்சர்கள் இருவரும் முதல்வர் கருணாநிதியை வரவேற்க நெல்லை சென்றுள்ளனர். தவறான புகார் தரப்பட்டிருக்கிறது. மேலும், தேர்தல் விதிகளுக்கு முரணாக ஊர்வலமாக சென்று மறியல் நடத்தியதற் காக அ.தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்றார்.

அ.தி.மு.கவினர் கொடுத்த புகாரின் பேரில் சூடம் மணி, கோபி, பாண்டி, முபாரக் மந்திரி உட்பட 50பேர் மீது தெற்குவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல், தி.மு.க 36வது வார்டு கவுன்சிலர் ராமர் (45) கொடுத்த புகாரின்பேரில் ராஜன் செல்லப்பா, அவரது மகன் சத்தியன், ஆறுமுகம், பரமன், பாஸ்கர், மாரியப்பன், துரைப்பாண்டி, தட்சிணாமூர்த்தி, கொத்தளன், சுப்பு, பூபாலன் ஆகிய 11 பேர் மீது போலீசார் கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து ராஜன் செல்லப்பா கூறுகையில், "மதுரை மத்திய தொகுதியில் அதிமுக வெற்றி பெறும். மதுரை மத்திய தொகுதி தேர்தல் பார்வையாளர் ஒருநாள் மட்டுமே தொகுதிக்கு வந்தார்.கொடிகளை அவிழ்க்க சொன்னார். அதன் பின்னர் அவரை காணவில்லை" என்றார்.

செய்தி : தினகரன்

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com