திமுகவுக்கே 6 மேயர் பதவிகள்?
சென்னை மாநகராட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி
சென்னை மாநகராட்சி தேர்தலில் இன்று காலை வரை அறிவிக்கப்பட்ட 153 முடிவுகளில் 148 வார்டுகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 4; விடுதலை சிறுத்தைகள்:2; பகுஜன் சமாஜ்: 1; சுயேச்சை: 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
பிற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முழுவிவரம்.
சென்னை தவிர்த்த 5 மாநகராட்சி
தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 318
தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வார்டு: 1
கட்சி வென்ற வார்டுகள்
திமுக 148
காங்கிரஸ் 27
கம்யூனிஸ்ட் 9
மார்க்சிஸ்ட் 18
பாமக 5
விடுதலை சிறுத்தைகள் 1
அதிமுக 58
மதிமுக 8
பாஜக 2
தேமுதிக 16
சுயேச்சைகள் 26
----------
நகராட்சிகள்
தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 4,374
தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வார்டு: 5
கட்சி வென்ற இடம்
திமுக 1595
காங்கிரஸ் 407
கம்யூனிஸ்ட் 40
மார்க்சிஸ்ட் 75
பாமக 125
விடுதலை சிறுத்தைகள் 3
அதிமுக 1016
மதிமுக 140
பாஜக 44
தேமுதிக 98
புதியதமிழகம் 1
பகுஜன் சமாஜ் கட்சி 1
மற்றகட்சிகள் 4
சுயேச்சைகள் 825
------------
பேரூராட்சிகள்
தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 8,780
தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வார்டுகள்: 2
வேட்புமனு பெறாத வார்டுகள்:25
கட்சி வென்ற இடம்
திமுக 2639
காங்கிரஸ் 737
கம்யூனிஸ்ட் 52
மார்க்சிஸ்ட் 164
பாமக 184
விடுதலை சிறுத்தைகள் 8
அதிமுக 1643
மதிமுக 184
பாஜக 148
தேமுதிக 234
புதியதமிழகம் 4
பகுஜன்சமாஜ் 2
ஐக்கியஜனதாதளம் 1
புதிய நீதிகட்சி 1
மற்றகட்சிகள் 3
சுயேச்சைகள் 2776
--------------
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்
தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 6569
தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வார்டு: 1
கட்சி வென்ற இடம்
திமுக 2488
காங்கிரஸ் 609
மார்க்சிஸ்ட் 85
கம்யூனிஸ்ட் 81
பாமக 423
விடுதலை சிறுத்தைகள் 8
அதிமுக 1417
மதிமுக 181
பாஜக 31
தேமுதிக 244
புதியதமிழகம் 5
இந்திய விக்டரி கட்சி 1
மற்றகட்சிகள் 6
சுயேச்சைகள் 990
-----------
மாவட்ட ஊராட்சி வார்டு
தேர்தல் நடைபெற்ற வார்டுகள்: 656
கட்சி வென்ற இடம்
திமுக 312
காங்கிரஸ் 80
கம்யூனிஸ்ட் 14
மார்க்சிஸ்ட் 7
பாமக 48
விடுதலை சிறுத்தைகள் 3
அதிமுக 157
மதிமுக 14
பாஜக 3
தேமுதிக 15
சுயேச்சைகள் 3
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நகராட்சி பேரூராட்சிகள் தலைவர் பதவிகளில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன.
கடைசி நிலவரப்படி 6 மாநகராட்சி மேயர் பதவிகளையுமே தி.மு.க., தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது. திருச்சி, கோவையை பெற காங்கிரஸ் தொடர்ந்து முயன்று வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு ஆவடி, அரக்கோணம், நாகர்கோவில் , தர்மபுரி, மன்னார்குடி, தாம்பரம், தேவக்கோட்டை, திருமங்கலம், விருதுநகர், தேனி, எடப்பாடி, கோபிசெட்டிப்பாளையம், சின்னமனூர், உள்ளிட்ட நகராட்சி தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன .
பாமகவுக்கு ஆத்தூர், வந்தவாசி, விருத்தாச்சலம், மாதவரம், சீர்காழி ஆற்காடு ஆகிய நகராட்சி தலைவர் பதவிகளும், காஞ்சிபுரம், சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குழித்துறை, கோவில்பட்டி, பழனி, சிதம்பரம், திருவெற்றியூர் ஆகிய நகராட்சி தலைவர் பதவியும், நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூ கட்சிக்கு திருவாரூர், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி இடமும், கடையநல்லூர், ராஜபாளையம் நகராட்சி தலைவர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம், திண்டிவனம் நகராட்சி தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தரப்பட்டுள்ளது,
மேலும் புரட்சி பாரதம், உழவர் உழைப்பாளர் கட்சிக்கு தலா ஒரு பேரூராட்சி தலைவர் பதவி இடம் வழங்கப்பட்டுள்ளது.
1 comment:
Update:
எல்லா மாநகராட்சிகளிலும் திமுகவே அதிக இடங்களைப் பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகராட்சிகள் உட்பட எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் இம்முறை பெருமளவில் வெற்றி பெற்றுள்ள சுயேட்சை கவுன்சிலர்களுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது. குதிரை பேரத்தால் கட்சி மாறுவதை தவிர்க்க தங்கள் வேட்பாளர்களை கடத்திச்சென்று பாதுகாக்கும் முயற்சிகளில் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
Post a Comment