Sunday, October 29, 2006

மாநகராட்சி மேயர்

சென்னையில் திமுகவைச் சேர்ந்த மா. சுப்பிரமணியம் மேயராகவும் ஆர்.சத்தியபாமா துணைமேயராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைமேயர்கள்

முன்னதாக நேற்று நடைபெற்ற மாநகராட்சி துணைமேயர் தேர்தல் விவரம்.

திருச்சியில் மு.அன்பழகன், மதுரையில் பி.எம்.மன்னன்,
கோவையில் நா.கார்த்திக் ஆகிய திமுக கவுன்சிலர்கள் துணை மேயர்களாக போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

சேலத்தில் துணை மேயர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் சி.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அ.தி.மு.க.வை சேர்ந்த வி.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். 43 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று சி.பன்னீர்செல்வம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு 17 ஓட்டுகள் கிடைத்தன.

நெல்லை துணை மேயர் பதவிக்கு தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளரான முத்துராமலிங்கத்தை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த பி.சுப்பிரமணியன் போட்டியிட்டார். முத்துராமலிங்கத்துக்கு 26 ஓட்டுகளும், சுப்பிரமணியனுக்கு 25 ஓட்டுகளும் கிடைத்தன. 2 ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளர் முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார்.

நகராட்சிகள்

மொத்தம் உள்ள 152 நகராட்சிகளில் தி.மு.க. கூட்டணி 129 நகராட்சி தலைவர்கள் பதவியை கைப்பற்றி உள்ளது. (தி.மு.க-97, காங்-19, பா.ம.க-7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-4, இந்திய கம்யூனிஸ்டு-1, விடுதலை சிறுத்தைகள்-1).

அ.தி.மு.க.வுக்கு 17 இடங்கள் கிடைத்து உள்ளன. சுயேச்சைகளுக்கு 7 இடங்கள் கிடைத்து உள்ளன. 2 இடங்களில் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com