Tuesday, October 17, 2006

மதுரையில் திமுக வெற்றி

பழனிவேல்ராஜன் மறைவை அடுத்து மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு விவரம்:
கவுஸ்பாட்சா-திமுக 50,994 (56%)
ராஜன் செல்லப்பா-அதிமுக 19,909 (23%)
பன்னீர்செல்வம்-தேமுதிக 17,394 (20%)

இரண்டாவதாக வந்த அதிமுக வேட்பாளரைவிட 31085 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்கு எண்ணிக்கையை விட வாக்கு வித்தியாசம் அதிகம். அதிமுக தேமுதிக இரண்டும் பெற்ற வாக்குகளை கூட்டினாலும் திமுக வாக்குகள் அதைவிட அதிகம்.

அதிமுக வாக்குகளையே தேமுதிக பிரித்துள்ளதாக தெரிகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக 38.2 சதவீத வாக்குகளைப்பெற்றிருந்தது. திமுக 45.83 சதவீதம்பெற்றது. இம்முறை திமுகவுக்கு மேலும் 11 சதவீதம் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது. அதே சமயம் அதிமுக 18 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. அந்த வாக்குகளையே தேமுதிக பெற்றிருக்க வேண்டும். அதிகப்படியாக இம்முறை வாக்களித்த புதிய வாக்காளர்களில் பலரும் திமுக அணிக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பதாக தோன்றுகிறது. சிறிய அளவு தேமுதிகவுக்கு கிடைத்திருக்கலாம்.

3 comments:

வலைஞன் said...

தினமலர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி இது: வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு?

மதுரை : மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கவுஸ் பாட்சா 31,085 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வாக்களித்துள்ள இத்தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு மதுரை மருத்துவ கல்லுõரியில் துவங்கியது. ஓட்டு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக முன்னிலையில் இருந்து வந்தது. முடிவில் திமுக வேட்பாளர் கவுஸ் பாட்சா அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை விட 31, 085 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா 19,909 ஓட்டுகள் பெற்றார். தேமுதிக வேட்பாளர் பன்னீர் செல்வம் 17,394 ஓட்டுகள் பெற்றார்.

வலைஞன் said...

தொலைக்காட்சியில் காட்டப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு இருந்தது. இப்போது திருத்தப்பட்டுவிட்டது.

வலைஞன் said...

மேலும் சில புள்ளி விவரங்கள் இணைப்பு...

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com