திமுக கூட்டணி வெற்றி
ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னை நீங்கலாக, மற்ற 5 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளதால் இந்த 5 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது. மதுரை, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி தக்க வைக்கிறது. கோவை மற்றும் நெல்லை மாநகராட்சிகளை அதிமுகவிடமிருந்து திமுக கூட்டணி பறிக்கிறது. சேலம் மாநகராட்சியில் திமுகவுக்கு தேமுதிக கடும் போட்டியைக் கொடுத்தாலும் திமுக கூட்டணியே வெல்லும் நிலையில் உள்ளது.
அதே போல 102 நகராட்சிகளில் கிட்டத்தட்ட 80 நகராட்சிகளில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளது. 10 நகராட்சிகளில் மட்டுமே அதிமுகவுக்கு முன்னிலை கிடைத்துள்ளது. சில நகராட்சிகளில் தேமுதிக முன்னணியில் உள்ளது. மேலும் 10 இடங்களில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது. 600 மூன்றாம் நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணியினரே பெருவாரியாக முன்னிலையில் உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவும் பல இடங்களை வென்று செல்வாக்கை நிருபித்துள்ளது. ஏராளமான சுயேச்சைகளும் இத்தேர்தலில் வென்றுள்ளனர். முழுமையான விவரங்கள் மற்றும் கிராம ஊராட்சி முடிவுகள் நாளைதான் முழுமையாக வெளியாகும் எனத் தெரிகிறது.
1 comment:
தேமுதிக எழுச்சி அலையா!! இல்லை
அதிமுக வீழ்ச்சியான்னு தெரியலையே
Post a Comment