Friday, October 13, 2006

தேர்தலில் வன்முறை

சென்னை மாநகராட்சி ஓட்டுப்பதிவில் வன்முறை:
அ.தி.மு.க.-ம.தி.மு.க. வேட்பாளர்கள் மீது தாக்குதல்


சென்னை, அக். 13-

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னை, கோவை, சேலம், நெல்லை ஆகிய 4 மாநகராட்சி, 45 நகரசபை, 23 மூன்றாம் நிலை நகரசபை, 281டவுன் பஞ்சாயத்து, 6557 கிராம பஞ்சாயத்துக்களுக்கு இன்று தேர்தல் நடந்தது.

முதல் கட்ட ஓட்டுப்பதிவுக் காக 42 ஆயிரத்து 206 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப் பட்டிருந் தன. தமிழக போலீசாருடன் பக்கத்து மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த 23 கம் பெனி போலீசார், 20 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர், 20 ஆயிரம் என்.எஸ்.எஸ். பிரிவினர், 500 வனத்துறை ஊழியர்கள், 1100 தீயணைப்பு வீரர்கள், 9 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், 2 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர்.

இன்று தேர்தல் நடக்கும் வாக்குச்சாவடிகளில் 5423 இடங்களில் வன்முறை ஏற்பட லாம் என்று கருதப்பட்டதால் அங்கு அதிரடிப்படை வீரர் கள் நிறுத்தப்பட்டனர். காலை 7 மணிக்கு வாக்காளர் கள் ஆர்வமுடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர். ஆனால் மக்கள் அமைதியாக வாக்களிக்க இயலவில்லை.

சென்னையில் 155 வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்ருந்த 3295 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதில் 1177 பகுதிகளில் பிரச்சினை ஏற்பட லாம் என்று கூடுதல் போலீ சார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

ஓட்டுப்பதிவு தொடங்கியசில நிமிடங்களில் சென்னை யில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. மயிலாப்பூர், சிந்தா திரிப்பேட்டை, ஆயிரம் விளக்கு மற்றும் வட சென்னை பகுதிகளில் வாக்கு சாவடி களில் மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க.வினர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

113-வது வார்டுக்கான ஓட்டுச்சாவடி அமைந்துள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக் குள் சைதை பாலாஜி என்ப வர் தலைமையில் சிலர் கும்ப லாக வந்தனர். அவர்கள் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டுச்சீட்டுக்களை எடுத்து தாங்களாகவே முத்திரை குத்திப் போட்டனர். இதற்கு அ.தி.மு.க. `பூத்' ஏஜெண்டு சண்முகம் எதிர்ப்பு தெரிவித் தார்.

அவரை அந்த கும்பல் தாக்கியது. இதில் சண்முகம் மூக்கு கண்ணாடி உடைந்தது. அவர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் கண்டு கொள்ளாததால் அத்துமீறி வந்த கும்பல் கள்ள ஓட்டு போட்டு விட்டு சென்று விட்டது.

ஜாம்பஜார், நாகேசுவரராவ் பூங்கா, ஜாபர்கான்பேட்டை பகுதிகளில் ஏராளமானவர்கள் கும்பல், கும்பலாக வந்து கள்ள ஓட்டு போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அடித்து துரத்தப்பட்டனர். இதனால் பல இடங்களில் வாக்காளர்களிடையே பீதி ஏற்பட்டது.

இதை பயன்படுத்தி பல இடங்களில் ஏராளமான கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டன. சென்னையில் பல இடங்களில் குடிசைவாசி பகுதி மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப் படவில்லை.

ஆர்.கே.நகர் தொகுதி 8-வது வார்டில் உள்ள 192-வது எண் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போடப்படுவதாக அ.தி.மு.க.வினர்குற்றம் சாட்டினர். ஒருவர் கட்டாககொண்டு வந்த வாக்குச் சீட்டை வடசென்னை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன் பறித்தார்.

அங்கு தி.மு.க.-அ.தி.மு.க. வினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. மோதலுக்கு தயார் ஆனார்கள். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

சைதாப்பேட்டை 135-வது வார்டில் உள்ள 21 மற்றும் 25-வது எண்கள் கொண்ட வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க ஆண்களும், பெண் களும் திரண்டிருந்தனர். காலை 7.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பல் அங்கு புகுந்தது.

வாக்களிக்க நின்றவர்களை யும், அ.தி.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டுகளை அடித்து விரட்டினர். இதை தடுத்ததேர்தல் பணியாளர் மிரட் டப்பட்டனர். வாக்கு சாவடி களை ஒரு கும்பல் கைப்பற் றியது. அவர்கள் வாக்களிக்க வந்தவர்கள் பெயர்களை மட்டும் பதிவு செய்து கொண்டு கள்ள ஓட்டு போட்டனர்.

வாக்குசாவடி கைப்பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு 135-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் விஜயா வந்தார். அவருடன் ம.தி.மு.க. நிர்வாகிகள் மதியழகன், வெங்கட் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சி யினர்கள்ள ஓட்டு போடப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த கும்பல் உருட்டுக்கட்டைகளால் அ.தி.மு.க. பெண் வேட்பாளர் விஜயாவை தாக்கினர் உடன் வந்தவர்களும் தாக்கப்பட்டனர். மேலும் சுயேட்சை பெண் வேட் பாளர்களான அமுதா, பரிமளா, விஜயலட்சுமி, மஞ்சுளா, டெல்லிபாய் ஆகியோரும் தாக்கப்பட்டனர்.

இதனை அங்கு நின்ற போலீசார்கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. போலீசாரை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷம் போட்டனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனையடுத்து சைதாப் பேட்டை இன்ஸ்பெக்டர் ராதா கிஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் அ.தி.மு.க.வேட்பாளர் விஜயா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 6 பேரையும் அவருடன் வந்த 50க்கும் மேற்பட்டோரையும் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள டி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

சேப்பாக்கம் பகுதி 81-வது வார்டு ம.தி.மு.க. வேட்பாளர் மார்க்கெட் சேகரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. கள்ள ஓட்டு போட முயன்றதைதடுத்ததால் ஒரு கும்பல் அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

147, 151-வது வார்டுகளில் உள்ள வாக்கு சாவடிகளை கார்களில் வந்த ஒரு கும்பல் கைப்பற்றியது. அங்கிருந்த அ.தி.மு.க., ம.தி.மு.க. பூத் ஏஜெண்டுகளை அந்த கும்பல் அடித்து வெளியேற்றியது. ஓட்டு போட வந்த பொதுமக்கள் ஓட்டு போடாமல் பயந்து ஓட்டம் பிடித்தனர்.

ராயபுரம் 19-வது வார்டில் வாக்கு சாவடிக்குள் ஒரு கும்பல் புகுந்து கைப்பற்றியது. பட்டேல் நகர் வாக்கு சாவடியில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நேதாஜி கணேசன் என்பவர் மேற்பார்வையாள ராக இருந்தார். அவரை தி.மு.க.வைச் சேர்ந்த கும்பல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் 108-வது வார்டில் காலை 8.30 மணிக்கு ஒரு கும்பல் வாக்கு சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து கள்ள ஓட்டு போட்டது. இதற்கு அ.தி. மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த கும்பல் கத்தியை காட்டி கள்ள ஓட்டுக்களை பதிவு செய்தது.

பாதுகாப்புக்கு நின்ற போலீ சார் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டனர். கள்ள ஓட்டு போடப்படும் தகவல் அறிந்ததும் 108-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் நுங்கை மாறன் அங்கு விரைந்தார். அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

போலீசார் எதையும் கண்டு கொள்ளாததால் நுங்கை மாறன் சாலை மறியல் செய்ய முயன்றார். உடனடியாக போலீசார் பாய்ந்து சென்று அவரை கைது செய்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறினார்கள்.

20-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் பிரபுராம். இவர் என்.என். கார்டன் வாக்கு சாவடி அருகில் நின்று கொண்டிருந்தார். அப் போது 50-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் திடீரென அவரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.8-வது வார்டு கார்னேசன் நகர் மாநகராட்சி பள்ளியில் வாக்குப்பதிவு நடந்த போது ஒரு கும்பல் புகுந்து சோடா பாட்டிலை உடைத்து ரோட்டில் வீசியது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கள்ள ஓட்டு போடுவதை போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்ததை கண்டித்து ராயபுரம் மெயின் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காசிமேடு மெயின் ரோட்டிலும் மறியல் செய்தனர். ரோட்டில் உட்கார்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

தண்டையார்பேட்டையில் தே.மு.தி.க. பெண் வேட்பாளர் ஒருவர் ரோட்டில் உருண்டு புரண்டு மறியல் செய்தார். போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 55-வது வார்டில் கள்ள ஓட்டு போட வந்த கும்பலை தே.மு.தி.க. வேட்பாளர் மதியழகன் தடுத்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இதை அறிந்த தே.மு.தி.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்தி: மாலைமலர்

3 comments:

VSK said...

வேதனையளிக்கும், நம்பிக்கை இழக்கச் செய்யும் செய்தி!

இவையெல்லாம் உண்மையெனில், ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்பட வேண்டும், உடனடியாக!!

வெட்கக்கேடு!

ரஜினி அன்று ஜெ. ஆட்சியைக் குறித்து சொன்னது இன்றும் பொருந்தும்!

Anonymous said...

திமுக ஆட்சியில் வன்முறை,ஜாதிக்கலவரம் எல்லாம் சகஜம் தான். வார்டு, வட்டம், சதுரம், மாவட்டம் எல்லாம் நாட்டாமைதான்.

சென்னையில் சட்டமன்ற தேர்தலில் தோற்றுள்ளதால், மேயர் பதவி அதிமுக-விற்கு போய்விடும் என்கிற பயத்தில் மேயர் மற்றும் நகராட்சித்தலைவர்களை வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிலையை திமுக அரசு (கருணாநிதி தன் குடும்ப நலன் கருதி) எடுத்துள்ளது. இவர்கள் ஆளும் கட்சியாக இருப்பதால், தேர்தலுக்கு பிறகு கட்சி சாரா (சுயேட்சை) கவுன்சிலர்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதெற்கெல்லாம் ஒரு ஒத்திகை தான் இன்று நடந்துள்ளது.

Nakkiran said...

ஜெ அரசை குறை சொல்ல கருணாநிதிக்கு அருகதை இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com